இதெல்லாம் வேற லெவல்! நீதிபதி வீசிய ஒரு சொல்.. இன்று மொத்த பாஜகவின் அஸ்திவாரத்தையே அசைக்குதே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி உதிர்த்த ஒரு வார்த்தை, இந்திய நாட்டின் அரசியலில் இவ்வளவு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், வேலையில்லா இளைஞர்களையும் சமூக ஆர்வலர்களையும் சமீபத்தில் வழக்கு ஒன்றில் "கரப்பான் பூச்சிகள்" மற்றும் "ஒட்டுண்ணிகள்" என்று விமர்சனம் செய்தார். அதாவது இவர்கள் எல்லாம் மற்ற விஷயங்களை கவனிக்காமல் போராட்டம், எதிர்ப்பு என்று கரப்பான் பூச்சி போல செயல்படுவார்கள் என்று கூறி இருந்தார். அவரின் இந்த கருத்து, இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அந்த ஒற்றைச் சொல்லையே தங்களின் அடையாளமாக மாற்றி, 'காக்கரோச் ஜன்டா கட்சி' என்ற பெயரில் கிண்டலாகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கம், இன்றைக்கு டெல்லியை உலுக்கும் மிகப்பெரிய மக்கள் போராட்டமாக, எழுச்சியாக, புரட்சியாக உருவெடுத்துள்ளது.

ஒரு அவமானம்

அமெரிக்காவில் உயர்கல்வி முடித்த இளைஞர் அபிஜீத் திப்கே, நீதிபதியின் அந்த விமர்சனத்தை அப்படியே தங்களுக்கு சாதகமாக மாற்றினார். நீங்கள் கரப்பான் பூச்சி என்று கிண்டல் செய்யும்.. இளைஞர்களின் குரல் என்ற முழக்கத்தோடு, 2026 மே மாதத்தில் CJP என்ற அமைப்பைத் தொடங்கினார்.

சிஸ்டத்தால் மறக்கப்பட்ட கரப்பான் பூச்சிகளே, ஒன்று கூடுங்கள்! என்ற ஒரே ஒரு சமூக ஊடக அழைப்பு, லட்சக்கணக்கான இளைஞர்களை இணைய வழியில் ஒன்றிணைத்தது. வெறும் 5 நாட்களில், ஆளும் பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை விட அதிக பின்தொடர்பாளர்களைப் பெற்று CJP சாதனை படைத்தது.

NEET வினாத்தாள் கசிவு

வெறும் விளையாட்டாக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் பல்வேறு விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறது. இதில் தற்போது நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்த நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராகத் தனது போராட்டத்தைக் திருப்பி உள்ளது.

How a Single word from a judge created the Cockroach Janta Party and erupted revolution

நாடு முழுவதிலும் இருந்து டெல்லிக்குத் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஜந்தர் மந்தரில் முகாமிட்டுத் தங்களின் கோரிக்கைகளை உரக்க எழுப்பத் தொடங்கி உள்ளனர். தொடர் வினாத்தாள் கசிவுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை.

தேர்வு குளறுபடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி பலியான மாணவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். தேர்வுகள் நடத்தும் அமைப்பில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை.

டெல்லியில் பேரணி

சமீபத்தில் நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியைத் தடுக்க காவல்துறையினர் பல அடுக்குத் தடுப்புகளை அமைத்தனர். இருப்பினும், மாணவர்களின் எழுச்சியைத் தடுக்க முடியாமல் இணைய சேவைகள் முடக்கப்பட்டன.. கண்ணீர் புகை குண்டுகளும் தடிடியடியும் நடத்தப்பட்டன.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இந்த போராட்டத்திற்கு ஆதரவாகப் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது, இயக்கத்திற்கு மேலும் வலிமை சேர்த்தது. தற்போது அவரும் மருத்துவமனையில் உள்ளார்.

ஒரு நீதிபதியின் அலட்சியமான வார்த்தைதான்.. இன்று வேலைவாய்ப்பின்மை மற்றும் தேர்வு முறைகேடுகளால் தவித்துக் கொண்டிருந்த இந்திய இளைஞர்களின் கோபத்தை வெளிக்கொண்டுவரும் ஒரு பொறி ஆக மாறியுள்ளது.

இளைஞர்களைப் புறக்கணிக்கும் எந்தவொரு அமைப்பும், அதே இளைஞர்களின் எழுச்சியால் கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதை டெல்லி வீதிகளில் எதிரொலிக்கும் CJP இயக்கத்தின் குரல் வெளிப்படுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+