டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர்னு பார்த்தா ஐஸ்வர்யா ராய்.. ஒரு மாதிரியா இருந்தாலும்.. புது மாதிரியாய்.. அசத்தும் சர்கார் !

Google Oneindia Tamil News

டெல்லி: 26 வயது கிராமத்து இளைஞர் ஒருவர் பேஷன் மீது கொண்ட ஆர்வத்தால் பாலிவுட் நடிகர், நடிகைகள் அணிந்திருக்கும் உடையை போல இயற்கையான பொருட்களை கொண்டு இலவசமாக கிடைக்கும் பொருட்களை கொண்டு உடையணிந்து பேஷனை மீள் உருவாக்கம் செய்யும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சர்பாஜித் சர்கார் அகா நீல் ரனாத் (26). இவர் இவருக்கு பேஷன் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பாலிவுட் நடிகர் நடிகைகள் அணிந்திருக்கும் உடைகளை அப்படியே அணிந்து கொண்டு படங்களை வெளியிடுகிறார்.

இவர் அணியும் உடைகள் இயற்கையான பொருட்களை கொண்டும் இலவசமாக கிடைக்கக் கூடிய பொருளை கொண்டும் உருவாக்கப்பட்டவையாகும்.

1 கோடி தடுப்பூசி.. ஆகஸ்ட் மாதம் கர்நாடகா வரும்.. ஹேப்பியாக அமைந்த முதல்வரின் முதல் டெல்லி பயணம் 1 கோடி தடுப்பூசி.. ஆகஸ்ட் மாதம் கர்நாடகா வரும்.. ஹேப்பியாக அமைந்த முதல்வரின் முதல் டெல்லி பயணம்

இயற்கை பொருட்கள்

இயற்கை பொருட்கள்

அணிகலன்களையும் இயற்கை பொருட்களையே தேர்வு செய்து அணிந்து வருகிறார். இந்த ஆர்வம் அவருக்கு எப்படி வந்தது என்பது குறித்து அவர் அளித்த பேட்டியில் எனது குடும்பத்தினர் எனக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஆதரவளித்து வருகிறார். ஆனால் எனது கிராமத்தினர் எனக்கு எதிர்காலம் இல்லை என்கிறார்தள். நான் எனது பெயருக்கு மட்டுமல்லாமல் எனது கிராமத்தின் பெயருக்கு அவமானத்தை தேடி தருவதாக தெரிவித்தனர்.

குறுகிய மனப்பான்மை

குறுகிய மனப்பான்மை

எனது கிராம மக்கள் பழமையான மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். எனது பணியை மதிக்கவில்லை. என்னுடைய கவனத்தை சிதைக்கவோ அல்லது மன உறுதியை அழிக்கவோ நான் அவர்களை அனுமதித்ததே இல்லை. எல்லாருமே அவர்களுக்கு தேவையானதை செய்வார்கள். என் வேலையை எல்லாரும் விரும்ப வேண்டும் என்ற அவசியமில்லை. நம் உலகில் உள்ள அசாதாரண பிரச்சினைகளை மக்கள் யாரும் உணரவில்லை.

ஏமாற்றக் கூடியவர்கள்

ஏமாற்றக் கூடியவர்கள்

இந்த உலகம் முழுவதும் உங்களை ஏமாற்றக் கூடிய நபர்கள் இருப்பார்கள். எனினும் நீங்கள் என்னவாக மாற விரும்புகிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். கிராமத்தில் உள்ள இந்த இளைஞர் செய்யும் போது அதை ஏன் என்னால் செய்ய முடியாது என எல்லோரும் நினைக்க விரும்புகிறேன். அசாதாரணமான செயல்களை செய்ய இந்த உலகில் யாரும் விரும்புவதில்லை. விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றைச் செய்வது என்பது நம் மக்களால் அசாதாரணமாகவும் பைத்தியகாரத்தனமாகவும் பார்க்கப்படுகிறது என்றார்.

விளம்பர படங்கள்

விளம்பர படங்கள்

இது போல் அவர் 100-க்கும் மேற்பட்ட பேஷன்களை செய்துள்ளார். முன்பெல்லாம் லக்ஸ், லேக் மீ விளம்பரங்களை மறு உருவாக்கம் செய்து வந்தார் இந்த இளைஞர். பின்னர் இன்ஸ்டாகிராம் வந்ததும் என்னை நான் ஆராயத் தொடங்கி புதுமைகளை புகுத்த தொடங்கிவிட்டேன் என்றும் அந்த இளைஞர் தெரிவித்தார். பொதுவாக இயற்கை, இலவசமாக கிடைக்கும் பொருட்களை வைத்து பலர் கைவினை பொருட்களை செய்வார்கள். ஆனால் இவர் அவற்றை கொண்டு ஆடைகளாக பயன்படுத்தியுள்ளார். இலைகள் மூலம், பூக்கள், மரப்பட்டைகள், மரத்தின் பட்டை காய்கள் ஆகியவற்றையும் இவர் பயன்படுத்தியுள்ளார்.

English summary
A Village boy become a fashion sensation using natural things.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X