Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னும் கொஞ்ச நேரம் தான்.. மிரள வைக்க போகும் "கோல்ட் மூன்.." மறக்காமல் வானத்தை பாருங்க.. வாவ் செம

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று இரவு நீங்கள் கண்டிப்பாக வானத்தைப் பாருங்கள்.. ஒரு கலக்கலான மற்றும் அதிசயமான நிகழ்வு வானில் நடக்கவுள்ளது. இது நிச்சயம் உங்களை வியக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நமது இந்த சூரியக் குடும்பம் என்பது பல ஆச்சரியங்களைக் கொண்ட ஒன்றாகும். இன்னும் கொஞ்ச நேரத்தில் வானில் அப்படியொரு ஒரு அதிசய நிகழ்வு நடக்கப் போகிறது. இன்று இரவு நீங்கள் வானத்தில் கோல்ட் மூன் என்ற நிகழ்வைப் பார்க்கப் போகிறீர்கள்.

 How and when to watch the Cold Moon which will to rise tonight

இந்தாண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்த அற்புதமான காட்சியை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். இதை கோல்ட் மூன் என்று அழைப்பார்கள். அதென்ன கோல்ட் மூன். அதில் என்ன சிறப்பு என்பதை பார்க்கலாம்.

கோல்ட் மூன்: கோல்ட் மூன் என்பது முழு நிலவு தான். ஆனால், இந்த கோல்ட் மூன் சமயத்தில் நிலவு வழக்கத்தைக் காட்டிலும் பெரிதாகத் தெரியும். இந்த கோல்ட் மூன் என்ற சொல் பூர்வீக அமெரிக்க மற்றும் ஐரோப்பியாவில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் குளிர்ச்சியான வானிலை நிலவும் போது இந்த கோல்ட் மூன் நிகழ்வு அமையும்.

இந்த கோல்ட் மூன் நிகழ்வின் போது, நிலவு 99.5 சதவீதம் வரை தெளிவாகத் தெரியும் என்பதே இதன் சிறப்பாகும். இன்று இரவு இந்த நிகழ்வு ஆரம்பித்தாலும் கூட நாளை (டிசம்பர் 27) அதிகாலை 6:03 மணிக்கு மிகச் சிறப்பாகத் தெரியும். நாளை காலை எழுந்து பார்ப்பவர்களுக்கு இந்தக் காட்சி நிச்சயம் நீங்காமல் மனதில் நிற்கும் என்றால் அதில் சந்தேகமே இல்லை.

வெறும் கண்களில் ரசிக்கலாம்: இந்த நிகழ்வு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தெரியும். குறிப்பாக எங்கெல்லாம் காற்று மற்றும் ஒளி மாசு (light pollution) குறைவாக இருக்கிறதோ, அங்கே இவை தெளிவாகத் தெரியும். டிசம்பர் 26 ஆம் தேதி இரவு முதல் இந்த அழகிய நிலவு நமக்குத் தெரியும். டிசம்பர் 27 ஆம் தேதி மாலை வரை இவை பிரகாசமாக ஒளிரும். அப்போது வரை நாம் இதை வெறும் கண்களிலேயே பார்க்கலாம்.

நாளை அதிகாலை தான் கோல்ட் மூன் முழுமையாகத் தெரியும் என்றாலும், இன்று இரவு முழுவதும் சந்திரன் அற்புதமான காட்சியைத் தரும் என்பதால் இதை மிஸ் செய்துவிடாதீர்கள். இந்த ஆண்டில் வரும் கோல்ட் மூன் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் மற்ற முழு நிலவுகளைக் காட்டிலும் இது வானத்தில் உயரமாக எழும். பார்க்கக் கம்பீரமாகவும் பெரியதாகவும் காட்சி அளிக்கும். மிக நீளமான இரவாகவும் இது இருக்கும். இந்த நீண்ட மற்றும் குளிர்ந்த இரவு நீண்ட நேரம் நிலவின் அழகை ரசிக்கும் ஒரு வாய்ப்பை நமக்கு ஏற்படுத்தித் தருகிறது.

அழகிய நிலவு: ஜொலிக்கும் நட்சத்திரங்களின் பின்னணியில் பொதுமக்கள் இந்த கோல்ட் மூனை ரசிக்கலாம். சந்திரன் ஓவர் வெளிச்சமாகத் தெரியும் நிலையில், இதனால் மற்ற நட்சத்திரங்கள் மிக மிக லேசாகவே தெரியும். இது குளிர் காலத்தின் முதல் முழு நிலவாக இருக்கும் நிலையில், பண்டைக் காலத்தில் மாதங்கள் மற்றும் பருவங்களின் மாற்றத்தைக் கண்காணிப்பதில் இது முக்கிய பங்கு வகித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+