ஸ்டாலின் டூ கோலி வரை ப்ளூ டிக் காலி! ஆனா இப்போ நீங்களும் ஈஸியா ப்ளூ டிக் வாங்கலாம்! எப்படி தெரியுமா
டெல்லி: ட்விட்டர் நிறுவனம் இப்போது கொண்டு வந்துள்ள கட்டண ப்ளு டிக் வசதி என்பது சற்று குழப்பமாகவே இருக்கிறது. இதன் மூலம் என்ன வசதிகள் கிடைக்கும், எப்படி ஒருவர் ப்ளூ டிக் வசதியைப் பெறலாம் என்பது குறித்து எல்லாம் பார்க்கலாம்.
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளில் சென்று முதலே, அவர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலில் ஆட்குறைப்பு தொடங்கிய நிலையில், அதன் பின்னர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

செலவைக் குறைத்து, வருவாயை அதிகரிக்க இப்படி அவர் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அப்படித்தான் அவர் வருவாய் ஈட்ட ப்ளூ டிக் வசதி பெறக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதிரடியாக அறிவித்தார்.
ட்விட்டர் தளம்: ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் பெயரில் போலியாகவும் பல கணக்குகள் இருக்கும். அப்போது உம்மையில் பிரபலத்தின் கணக்கு யாருடையது என்பதை எளிதாகக் கண்டறியவே இந்த ப்ளூ டிக் வசதியை ட்விட்டர் கொண்டு வந்தது. எலான் மஸ்க் வந்த பிறகு, யார் வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் வசதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார். அப்போது முதலே இந்த முடிவு பேசுபொருளாகி வந்தது.
இதனிடையே இலவசமாக ப்ளூ டிக் இருக்கும் கணக்குகள் ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் ப்ளூ டிக் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்வர் ஸ்டாலின், விராட் கோலி எனப் பலரது ட்விட்டர் கணக்குகளிலும் இன்று ப்ளூ டிக் இல்லை. இதனால் நெட்டிசன்கள் பலரும் குழப்பமடைந்தனர். ஆனால், இனிமேல் ட்விட்டரில் இதுதான் நடைமுறையில் இருக்கும் என்பதை எலான் எஸ்க் பல முறை தெளிவாகக் கூறிவிட்டார்.
எவ்வளவு செலவாகும்: ட்விட்டர் ப்ளூ சந்தா என்பது நீங்கள் எதில் ட்விட்டரை பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து மாறும். ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில், மாதத்திற்கு ரூ.900 செலுத்த வேண்டும். அதேநேரம், சிஸ்டத்தில் பயன்படுத்துவோரின் சந்தா மாதத்திற்கு 650 ரூபாய் அல்லது வருடத்திற்கு 6,800 ரூபாய் ஆகும்.

அதாவது, ஆண்டு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இணையப் பயனர்களால் மாதம் ரூ.566.6 மட்டும் செலுத்தி ப்ளூ டிக் வசதியைப் பெற முடியும். மொபைல்களில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களுக்கு தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதாலேயே இந்த கட்டண வேறுபாடாகும். சரி இப்போது நீங்களும் ப்ளு டிக் வசதியை எப்படிப் பெறலாம் என்பதை பார்க்கலாம்.
எப்படிப் பெற முடியும்: நீங்கள் ட்விட்டர் ஆப்ஸின் புது அப்டேட்டட் வெர்ஷனை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். iOS அல்லது Android மூலம் என்றால்.. ப்ரோபைல் மெனு > Twitter Blue > Subscribe என்பதற்குச் செல்லவும்.இதுவே இணையம் மூலம் சேர வேண்டும் என்றால்.. Twitter.comக்குச் சென்று More > Twitter Blue > Subscribe என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அவ்வளவு தான் கட்டணம் செலுத்தியவுடன் ப்ளூ டிக் வசதி கொடுக்கப்படும். ப்ளூ டிக் சந்தாதார்களுக்கு ட்வீட்டை எடிட் செய்யும் வசதி, 50% குறைவான விளம்பரங்கள், பெரிய ட்வீட்களை பதிவிடும் வசதி, பெரிய வீடியோக்கள் பதிவிடும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும்.
அதேநேரம் புதிதாக உருவாக்கப்படும் கணக்குகளுக்கு முதல் 30 நாட்கள் ப்ளூ டிக் வாங்க முடியாது. அதேபோல ட்விட்டர் நிறுவனம் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் ப்ளு டிக் வசதியை நீக்க முடியும்.
கூடுதல் சலுகைகள்: இனி கட்டணம் செலுத்தினால் மட்டுமே ப்ளூ டிக் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு பிரபலங்களைக் கண்டறிய ப்ளூ டிக் பயன்படுத்தப்பட்ட நிலையில், இப்போது அது கட்டண சந்தாதாரர் என்று அறிய மட்டுமே பயன்படும். மேலும், அவர்களுக்குக் கூடுதலாக சில சலுகைகளும் கிடைக்கும்.
இதற்கு முன்பு வரை ப்ளூ டிக் பெற நாம் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், இது எப்போதும் வெளிப்படையான வழிமுறையாக இருந்தது இல்லை.. எப்படி நமது விண்ணப்பம் ஏற்கப்படுகிறது. நிராகரிக்கப்படுகிறது என்பதில் தெளிவே இல்லாமல் தான் இருந்தது. ஆனால், இப்போது அதை எளிமைப்படுத்தியுள்ளார். யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் வசதியைப் பெறலாம்.
ப்ளூ டிக் சந்தாதாரர்களுக்குக் குறைவான விளம்பரங்கள், ட்வீட்களைத் திருத்தும் வசதி உள்ளிட்டவை அளிக்கப்படும். இருப்பினும், சமூக வலைத்தளங்கள் என்றால் இலவசம் தான் என்று நாம் பழிகிவிட்ட நிலையில், கட்டணம் செலுத்தி யாராவது ளூ டிக் வசதியைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் செலுத்துவது என்பதெல்லாம் மிகக் குறைவான நபர்களே முன்வந்து செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications