ராகுலுக்கு ஷாக்.. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் பாஜக தான்.. பரபர சர்வே முடிவுகள்
டெல்லி: பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என இந்தியா டுடே சர்வேயில் கூறப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மாநிலங்களில் பாஜகவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்கிடையே இந்தியா டுடே செய்தி நிறுவனம், மூட் ஆப் தி நேஷன் என்ற சர்வே முடிவுகளை இப்போது வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சி மாநிலங்கள்: இதற்கிடையே நாட்டில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் லோக்சபா தேர்தலில் பாஜக எத்தனை இடங்களில் வெல்லும் சூழல் இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம். இப்போது பாஜக இமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் + ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) ஆட்சியில் இருக்கிறது.
அடுத்து டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. மேலும், கேரளாவில் இடதுசாரிகள், தமிழ்நாட்டில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இவை அனைத்தும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திரா மற்றும் ஒடிசாவில் பிராந்திய கட்சிகள் வலுவாக இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் மத்திய பாஜக அரசுடன் இணக்கமான போக்கையே கொண்டுள்ளனர்.
எனவே, அந்த இரு மாநிலங்களையும் தவிர்த்துப் பார்த்தால் மொத்தம் 9 மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இந்த 9 மாநிலங்களில் பாஜகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
காங்கிரஸ் மாநிலங்கள்: இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவுக்குப் போட்டி இருப்பது போலத் தெரியவில்லை. கடந்த 2019 லோக்சபா தேர்தலைப் போலவே இந்த முறையும் அங்குள்ள 4 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நவ. மாதம் தான் கர்நாடக மாநிலத்தை பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில், அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்குள்ள பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் உள்ள 28 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் பாஜக 24 தொகுதிகளிலும் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடும் போது, பாஜகவுக்கு மூன்று இடங்கள் குறைவு என்ற போதிலும் அதிக இடங்கள் அவர்களுக்குத் தான் கிடைக்கும்.
ஒரே நல்ல செய்தி: அதேநேரம் தெலுங்கானாவில் தான் காங்கிரசுக்கு நல்ல செய்தி இருக்கிறது. அங்கு 2019இல் காங்கிரஸ் வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், இந்த முறை 10 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 17 சீட்கள் உள்ள நிலையில், பாஜகவும் டிஆர்எஸ் கட்சியும் தலா மூன்று இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மஜ்லீஸ் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் 2019 தேர்தலில் நிலவிய சூழலே இருக்கும். அங்கு மொத்தம் 14 இடங்கள் இருக்கும் நிலையில், 56% வாக்குகளுடன் பாஜக கூட்டணி 12 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கூட்டணி 2019ஐ போலவே இரண்டு இடங்களில் மட்டும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி மாநிலங்கள்: அடுத்து இந்தியா கூட்டணி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் என்ன நிலை என்று பார்க்கலாம்.. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தான் வெல்லும். இங்கே பாஜக கூட்டணிக்கு ஒரு சீட் கூட கிடைக்காது எனக் கூறப்பட்டுள்ளது. கேரளாவிலும் அதே நிலை தான். அங்கு அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தான் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 42 தொகுதிகள் உள்ளன. அதில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும் பாஜக 19 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை இரண்டு இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் பாஜகவுக்கு ஒரு இடம் கூடுதலாகக் கிடைக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தை இழக்கிறது.
ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்கள் என்று பார்க்கும் போது, டெல்லியில் மொத்தம் ஏழு லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அத்தனை இடங்களையும் பாஜக வெல்லும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலிலும் பாஜக டெல்லியில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தலா 5 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக இரண்டு இடங்களிலும் சிரோமணி அகாலி தளம் ஒரு இடத்திலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் 3 இடங்களை இழக்கிறது. ஆம் ஆத்மி 4 இடங்களைக் கூடுதலாகப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications