"மினுமினுக்குதே.." அப்படியே தங்கம் போல.. ஆனா வெறும் தாமிரம்! சீனா செய்த செயலால் மிரண்ட நெட்டிசன்கள்
டெல்லி: சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் கிட்டதட்ட தங்கத்தைப் போலவே இருக்கும் ஒரு பொருளை உருவாக்கியுள்ளனர். தாமிரத்தை வைத்தே அவர்கள் மிணுமிணுக்கும் தங்கத்தை உருவாக்கியுள்ளனர்.
இங்கே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு எப்போதும் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது. பொருளாதார ரீதியில் எதாவது சிக்கல் ஏற்பட்டால் தங்கம் தான் இவர்களைப் பாதுகாக்கும்.
ஆனால், சீனாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் மலிவான தாமிரத்தை கிட்டதட்ட தங்கத்தைப் போலவே இருக்கும் ஒரு பொருளாக வெற்றிகரமாக மாற்றியுள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா.. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீன ஆய்வாளர்கள்: இதன் மூலம் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் தேவை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோனிங்கில் உள்ள லியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் பேராசிரியர் சன் ஜியான் என்பவர் தனது குழுவுடன் இணைந்து இந்த கண்டுபிடிப்பைச் செய்துள்ளார். இதில் தாமிரத்தின் மீது சார்ஜ் செய்யப்பட்ட ஆர்கான் வாயுவை அனுப்புவதன் மூலம் அவர்கள் அதைத் தங்கத்திற்கு இணையான பொருளாக மாற்றுகிறார்கள்.
அதாவது இந்த முறையில் அயனியாக்கம் செய்யப்பட்ட துகள்கள் (fast-moving ionised particles) தாமிரத்தின் மீது மோதி அதன் அணுக்களை வெடிக்கச் செய்கிறது.. அந்த அணுக்கள் குளிர்ந்து ஒரு மெல்லிய மணல் அடுக்கை உருவாக்குகின்றன. இவை அளவில் நானோமீட்டரில் தான் இருக்கிறது. அதாவது இது ஒரு பாக்டீரியாவின் ஆயிரத்தில் ஒரு பங்கு விட்டம் கொண்டதாகும்.
அப்படியே தங்கம் போலவே: பின்னர் இதை நிலக்கரியை ஆல்கஹாலாக மாற்றும் ஒரு ரியாக்ஷன் சேம்பரில் வைக்கிறார்கள். இந்த சேம்பரில் எப்போதும் தங்கத்தை வைத்தால் மட்டுமே அது செயல்படும். இதில் இருக்கும் கடினமான ரசாயன செயல்முறையைத் தங்கத்தால் மட்டுமே கையாள முடியுமாம். ஆனால், அதற்கு பதிலாகச் சீன ஆய்வாளர்கள் உருவாக்கிய இந்த தாமிரத்தை வைத்தாலே இது வேலை செய்கிறதாம்.
இந்த தாமிர நானோ துகள்கள் தங்கத்தைப் போலவே செயல்திறனை அடைவதாக அவர்கள் கூறுகின்றனர். தாமிரம் தங்கத்தைப் போலவே எடையும் தோற்றமும் கொண்டது. பல நூற்றாண்டுகளாக இது தாமிரம் நம்மிடையே புழக்கத்தில் இருந்து வரும் ஒரு உலோகமாகும். அடடே, தங்கத்தைத் தான் எங்கும் மீண்டும் தயாரிக்க முடியாதுனு நம்பி வாங்குகிறோம்.. அதிலும் கூட போலி வந்துவிட்டதா என்று நீங்கள் அஞ்ச வேண்டாம். இதை நாம் நகைக்குப் பயன்படும் தங்கமாக எல்லாம் மாற்ற முடியாதாம்.
நிம்மதி: ஏனென்றால் பொதுவாகத் தங்கத்தை உருக்கித் தான் நகை செய்வார்கள். சீன ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள இது பார்க்க தங்கம் போல இருந்தாலும் அதன் அடர்த்தி சாதாரண தாமிரத்தைப் போலவே இருக்கும். எனவே, இதை உருக்கி விரும்பியபடி நகை செய்வது கிட்டதட்ட முடியாது.
நகைக்காக இதைப் பயன்படுத்த முடியாது என்ற போதிலும் தொழிற்சாலைகளில் இருக்கும் தங்கத்தின் பயன்பாட்டை இது வெகுவாக குறைக்கும். இதன் மூலம் சீன தொழிற்சாலைகளில் தங்கத்தின் பயன்பாட்டைக் குறைத்து அதிக லாபமடைய முடியும். தங்கம் என்பது இன்று நாம் பயன்படுத்தும் பல மின்சாதன கருவிகளிலும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. உதாரணமாக ஸ்மார்ட்போன்களில் மட்டும் குறிப்பிட்ட அளவுக்குத் தங்கம் இருக்கிறது. இதுபோல பயன்படுத்தப்படும் தங்கம் ஓரளவுக்குக் குறையும்.
எதற்கு உதவும்: அதேநேரம் இந்த பொருளைத் தொழிற்சாலைகளிலும் முழுமையாகவும் தங்கத்திற்குப் பதிலாகப் பயன்படுத்த முடியாது.. எலக்ட்ரான்கள் குறைவாக இருப்பதால் தாமிரத்தால் தங்கத்தைப் போலச் செயல்பட முடியாது. தங்கத்தில் இருக்கும் எலக்ட்ரான்கள் மிகவும் வலுவான பிணைப்பைக் கொண்டிருக்கும். இதனால் அவை மற்ற கெமிக்கல்களுடன் எளிதாக ரிஆக்ட் செய்யாது. ஆனால், தாமிரம் அப்படியில்லை.. பலவீனமான எலக்ட்ரான்களால் அவை மிக எளிதாக வினை புரியும்.
சீன ஆய்வாளர்கள் உருவாக்கிய இந்த பொருள் அதிக வெப்பநிலை தாங்கும்.. ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அரிப்பு ஆகியவற்றை எதிர்க்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது போர்க்களத்தில் தங்கக் கவசத்துடன் கூடிய போர்வீரனைப் போன்றது, எந்த எதிரி தாக்குதலையும் தாங்கும் திறன் கொண்டது என்று சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications