அமெரிக்கா விசா பெற பெண்ணுக்கு உதவிய ‛பிளிங்கிட்' டெலிவரி.. 15 நிமிடத்தில் நடந்த மேஜிக்! கஸ்டமர் ஹேப்பி
டெல்லி : அமெரிக்கா செல்ல கவுரி குப்தா என்பவர் டெல்லியில் உள்ள அந்த நாட்டின் தூதரகத்துக்கு சென்றார். அப்போது சில ஆவணங்களை அவர் வீட்டில் மறந்து வைத்து விட்டார். நீண்டவரிசை இருந்ததால் அவரால் அதனை எடுத்து வர முடியாத நிலையில் ‛பிளிங்கிட்' டெலிவரி 15 நிமிடத்தில் உதவி செய்தது. இதனால் தற்போது அந்த பெண் அமெரிக்காவுக்கான விசாவை பெற்றுள்ளார்.

நம் நாட்டில் ஆன்லைன் டெலிவரிக்கு ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. உணவு முதல் அனைத்து வகையான பொருட்களையும் நாம் இருந்த இடத்தில் இருந்து கொண்டு ஆன்லைன் டெலிவரி மூலமாக பெற்று கொள்ள முடியும்.
இந்நிலையில் தான் அமெரிக்கா செல்ல விசா எடுக்க சென்ற கவுரி குப்தா என்ற பெண்ணுக்கு ‛பிளிங்கிட்' நிறுவனம் உதவி செய்தது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கவுரி குப்தா என்ற பெண், ஏஐ தொடர்பான ‛ஸ்டார்ட்அப்' நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் அமெரிக்கா செல்வதற்காக O-1 ரக விசா பெற டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு சென்றார். அங்கு நீண்ட வரிசையில் மக்கள் நின்றனர். இதற்கிடையே தான் விசா பெற சில முக்கிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது. இந்த வேளையில் அவருக்கு ‛பிளிங்கிட்' டெலிவரி தான் உதவி செய்தது. தற்போது கவுரி குப்தா அமெரிக்காவின் விசாவை பெற்றுள்ளார்.
அந்த பெண்ணுக்கு ‛பிளிங்கிட்' டெலிவரி எப்படி உதவியது என்பது பற்றி கவுரி குப்தா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது: டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தனது ஓ-1 விசா நேர்காணலுக்கு காத்திருந்தேன். அப்போது "ஓ-1 விசா அங்கீகாரத்திற்கு கூகுள் முக்கியமானதென கூறும் சில ஆவணங்கள் என்னிடம் இல்லை என்பதை உணர்ந்தேன். காலை 8 மணிக்கு நேர்காணல் நேரம் ஒதுக்கப்பட்டதால், ஆவணங்களை எடுத்து வர எனக்கு நேரமில்லை.
இந்த வேளையில் காவலாளி ஒருவர், ப்ளிங்கிட் சேவையைப் பயன்படுத்தி ஆவணங்களை வரவழைக்கலாம் என்று பரிந்துரைத்தார். வரிசையில் நின்றவாறே, நான் எனது ஆவணங்களை அந்த செயலியில் பதிவேற்றினேன். அடுத்த 15 நிமிடங்களில் அந்த ஆவணங்கள் பிரிண்ட்டாக எனது கையில் வந்து சேர்ந்தது. இப்போது விசா எனக்கு கிடைத்துள்ளது'' என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
-
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications