ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெறும் வசதி.. விரைவில் அறிமுகம்.. எப்படி பெறுவது.. விவரம்
Recommended Video
டெல்லி: ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தற்போது புதிய பான் கார்டை இரண்டு நாளில் வாங்கிவிட முடியும்.ஆனால் ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் தொலைந்து போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ புதிதாக மாற்று பான் கார்டை பெற்றுக்கொள்ள 20 நாட்கள் ஆகுகிறது..
இந்நிலையில் தான் ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெறும் வசதியை வருமான வரித்துறை விரைவில்அறிமுகம் செய்ய உள்ளது.

இ பான் கார்டு
இதன்படி ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் தொலைந்து போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ எலெக்ட்ரானிக் பான் கார்டு (இ-பான்) எந்தவித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

பாஸ்வேர்டு
ஆதார் கார்டு அடிப்படையில் பான் கார்டு வழங்கப்பட உள்ளது. ஆதார் கார்டில் உள்ள விவரங்களை சரிபார்த்த பிறகு, வருமான வரித்துறையில் இருந்து விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு ஒரு முறை பாஸ்வேர்டு அனுப்பி வைக்கப்படும்.

சரிபார்க்கணும்
அதை பயன்படுத்தி விண்ணப்பதாரர் தனது பான் கார்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் புதிய இ-பான் கார்டை இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

எப்படி தகவல்கள்
ஆனால் ஆதார் அடிப்படையில் வழங்கப்படுவதால், ஆதாரில் உள்ள புகைப்படம், பெயர், தந்தை பெயர், முகவரி விவரங்கள் மட்டுமே உங்களது புதிய பான் கார்டிலும் இடம்பெறும்.

ஆன்லைனில்
ஆதாரில் உள்ள விவரங்கள் தவிர மற்ற விவரங்களை மட்டுமே விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பான மாதிரி திட்டம் அண்மையில் பரிசோதனை செய்து வருமான வரித்துறை பார்த்தது.இதன்படி சுமார் 62,000 இ-பான் கார்டுகள் 8 நாட்களில் வழங்கப்பட்டது.

அதிகாரிகள் தகவல்
இந்த திட்டத்தில் குறைபாடு உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள். அடுத்த சில வாரங்களில் உடனடியாக பான் கார்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications