செந்தில் பாலாஜிக்கு புது சிக்கல்.. எப்படி அமைச்சராக தொடர்கிறார்? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் அவர் எப்படி அமைச்சராக தொடர்கிறார்? என்று கேள்வி எழுப்பியதோடு, இதுதொடர்பான கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காததை கண்டித்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறிய வழக்கு விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடியாக சோதனைகள் நடத்தப்பட்டது.

அதன்பிறகு கடந்த ஆண்டு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து அவர் ஜாமீனில் விடுதலையானார். ஆனால் ஜாமீனில் வெளியே வந்தவுடனேயே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானார்.
அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டபோது செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த நிலையில் அதனை ராஜினாமா செய்தார். மீண்டும் அமைச்சரானதும் செந்தில் பாலாஜிக்கு அந்த 2 இலாகாவையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த விவகாரம் சர்ச்சையானது. ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு உடனே அமைச்சர் பதவியா? என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்ய தொடங்கினர்.
மேலும் சென்னையைச் சேர்ந்த வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ‛‛அமைச்சர் பதவியில் இல்லை எனக் காரணம் காட்டி செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால் மறுநாளே அவர் அமைச்சராகி உள்ளார். செந்தில் பாலாஜிக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அவர் அமைச்சராக இருப்பதன் மூலம் விசாரணை பாதிக்கப்படலாம். இதனால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்'' என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 'ஜாமீன் பெற்ற மறுநாளே செந்தில் பாலாஜியை அமைச்சராக்கி இருப்பதன் மூலம் வழக்கில் தொடர்புள்ள சாட்சிகளுக்கு அழுத்தம் ஏற்படாதா? வழக்கின் விசாரணை பாதிக்கப்பட்டால், அமலாக்கத்துறை கோர்ட்டை நாடுவார்கள்'' என ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தது. அதன்பிறகு இந்த வழக்கை ஒத்திவைத்தது.
இதையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா உள்பட 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் அதிரடியான கேள்வியை எழுப்பியது. அதாவது செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி தொடருகிறார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் இந்த வழக்கில் விபரமளிக்க கால அவகாசம் வழங்கியபோதும் செந்தில் பாலாஜி தரப்பு அதுபற்றி எந்த பதிலும் அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜி ஏன் அமைச்சராக நீடிக்க வேண்டும்? இந்த வழக்கின் சாட்சியங்களை பயமுறுத்த முயல்கிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான பதிலை டிசம்பர் 18ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை தங்களின் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அமைச்சர் பதவி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால், செந்தில் பாலாஜிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதோடு டிசம்பர் 18ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அன்றைய தினம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications