4 மாநில தேர்தல் முடிவு வந்ததும்.. 2 பேரின் அரசியல் வாழ்க்கையே ஓவர் ஆக போகுது.. சரியும் சகாப்தம்!
போபால்; மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்த பின் பெரும்பாலும் 2 பேரின் அரசியல் வாழ்க்கையே முடிவிற்கு வரும்.. அரசியல் வாழ்க்கையில் இந்த தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய அஸ்தமனமாக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் வர உள்ளன.
5 மாநில சட்டசபை தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. தெலுங்கானா தேர்தல் இன்று நடந்தது.
இதையடுத்து இன்று டிசம்பர் 3ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன. அதற்கு முன் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.
மத்திய பிரதேச தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள்; மொத்த கணிப்புப்படி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 93-106 பாஜக 120-134மற்றவை 1-5 இடங்களில் வெல்லும். - அதாவது பாஜக ஆட்சி அமைக்கும். இங்கே 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும் .

அரசியல் வாழ்க்கை முடிவிற்கு வருகிறது: இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் பட்சத்தில்.. கணிப்பில் கூறியுள்ளது போலவே காங்கிரஸ் படுதோல்வி அடையும் பட்சத்தில்.. அது இரண்டு பேரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக மாறும். ஒருவர் கமல்நாத். இன்னொருவர் திக் விஜய் சிங்.
இங்கே காங்கிரசின் முகமாக மூன்று பேர் இருந்தனர். ஒருவர் கமல்நாத். இன்னொருர் திக் விஜய் சிங். இன்னொரு ஜோதிராதித்ய சிந்தியா. இதில் சிந்தியா பாஜக சென்று அமைச்சர் ஆகிவிட்டார். கமல் நாத ஆட்சியை இழந்ததோடு இல்லாமல்.. தனக்கு இருந்த அரசியல் கிரேஸையும் இழந்துவிட்டார். திக் விஜய் சிங் பெரிதாக ஆக்டிவாக இருப்பது இல்லை.
காங்கிரஸ் முகம் இல்லை: அப்படி இருக்க மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு என்று வலுவான மாநில முகம் கிடையாது. அங்கே மாநில ரீதியாக வலுவாக காங்கிரசை தூக்கி நிறுத்தும் முகம் கிடையாது. ஒருவேளை இங்கே காங்கிரஸ் படுதோல்வி அடையும் பட்சத்தில்.. அது அரசியல் ரீதியாக திக் விஜய் சிங், கமல் நாத் இருவருக்கும் ரிட்டயர்மெண்ட் போலவே பார்க்கப்படும். காங்கிரஸ் வேறு இளம் தலைவர்களை தேடி செல்ல வேண்டும் நிலை ஏற்படும்.
மத்திய பிரதேச ஆட்சி வரலாறு: மத்திய பிரதேசம் பொதுவாகவே பாஜக ஆதரவு மாநிலம். குஜராத்திற்கு அடுத்து.. ஏன் குஜராத்தை விட.. பாஜக ஆதரவு அதிகம் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம். பாஜகவின் கோட்டை என்று கூட இதை சொல்லலாம்.

மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது.
சிவராஜ் சிங் சவுகான் அங்கே ஆட்சி அமைத்தார். அதன்பின் கடந்த தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால் 1 வருடத்தில் அங்கே கமல்நாத் ஆட்சியை ஜோதிராதித்யா சிந்தியா கவிழ்த்தார். இவர் பாஜகவில் இணைந்து தன்னுடன் சில எம்எல்ஏக்களையும் அழைத்து சென்று ஆட்சியை கவிழ்த்தார். இதன்பின் வந்த இடைத்தேர்தலில் பாஜக கூடுதல் எம்எல்ஏக்களை மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு வந்தார்;
கணிப்பு படியே தேர்தல் முடிவுகள் வந்தால்.. இந்திய அரசியலில் கவனிக்கப்பட்ட இரண்டு அரசியல் தலைவர்கள், கமல்நாத், திக்விஜய் சிங்.. இருவரும் தங்களின் அரசியலுக்கு முடிவுரை எழுத நேரிடும்!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications