2019ல் முதற்கட்ட தேர்தலிலேயே.. 60% வெற்றிக் கொடி நாட்டிய பாஜக! இந்த முறை எப்படி இருக்கும்?
டெல்லி: நாளை 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட லோக்சபா தேர்தல் தொடங்கும் நிலையில், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் களமிறங்கி, எத்தனை தொகுதிகளை வென்றது என்கிற விவரங்கள் தற்போது பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே, நேற்றுடன் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரங்கள் நிறைவடைந்தன. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாடு (39), அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் பாஜக 56 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 70% தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆண்டு முதற்கட்ட தேர்தலில் 77 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. காங்கிரஸ் 56 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. அதிகபட்சமாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 86 தொகுதிகளிலும், அதிமுக 32+2, திமுக 22 தொகுதியிலும் போட்டியிடுகிறது. தமிழகத்தை பொறுத்த அளவில் கடந்த 2019ல் திமுக முதற்கட்ட தேர்தலின்போது 20 இடங்களில் போட்டியிட்டிருந்தது.
அதேபோல பாஜக 2019ல் 56 இடங்களில் போட்டியிட்டு 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.
இந்த தேர்தலில் மற்றும் சில கவனிக்கத்தக்க அம்சங்களும் இருக்கின்றன. அதாவது, நாட்டின் தென் கோடியான கன்னியாகுமரிக்கும், வட கோடியான ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூருக்கும் நாளை தேர்தல் நடத்தப்படுகிறது. அதேபோல நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளுடன் கரூர் தொகுதியை ஒப்பிட்டால், மற்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை விட இந்த தொகுதியில் அதிகமானோர் போட்டியிடுகின்றனர். அதாவது, 54 பேர் இந்த தொகுதியில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதில் 46 பேர் சுயேட்சைகள்.
மறுபுறம் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் போட்டியிடும் திப்ருகார் தொகுதியில் குறைந்த அளவில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதாவது வெறும் 3 பேர் மட்டுமே இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர். வித்தியாசமான கட்சிகளை பொறுத்த அளவில், தமிழ்நாட்டில், ஊழல் எதிர்ப்பு டைனமைட் கட்சி மற்றும் விரோன் கே வீர் இந்தியக் கட்சி என்கிற பெயரில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications