தகர்க்க முடியாத காங்கிரஸ் சாதனை.. இதுவரை நடந்த தேர்தல்களில் பாஜக, காங். வென்ற தொகுதிகள் எண்ணிக்கை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாஜக சுமார் 300 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 220 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், பாஜக காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் எண்ணிக்கை பற்றி பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் நமது நாட்டின் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார். மீதமுள்ள 542 தொகுதிகளில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடந்த தேர்தல் முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress india alliance delhi 2024 2024 politics

பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் உள்ளன. ஆளும் பாஜகவின் ஹாட்ரிக் கனவு நனவாகுமா? அவர்களது நம்பிக்கைக்கு இந்தியா கூட்டணி அதிர்ச்சி அளிக்குமா? என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்து விடும்.

1951-52 ஆம் ஆண்டுகளில் நடந்த நாட்டின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் 364 தொகுதிகளை வென்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வத்தார். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 371 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மீண்டும் 1962இல் 361 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்றது. 1967இல் 283 ஆகவும் குறைந்தது.

1984இல் இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாட்டில் உள்ள லோக்சபா தொகுதிகளில் 415 இடங்களை வென்றது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கட்சி ஒரு தேர்தலில் வென்ற அதிகபட்ச தொகுதிகள் இதுவே. இந்தச் சாதனை இதுவரை தகர்க்கப்படவில்லை.

பாஜக 1984இல் தனது தொகுதிகள் எண்ணிக்கையை தொடங்கியது. 1984ல் 2 பேர் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றனர். 1989இல் 85, 1991இல் 120, 1996இல் 161 என அதிகரித்துக்கொண்டே வந்தது. அடுத்த 2 தேர்தல்களில் பாஜக 182 தொகுதிகளில் பாஜக வென்றது. 2004ல் பாஜக 138 இடங்களை வென்றது. 2009 தேர்தலில் பாஜக வெ116 இடங்களில் வென்றது.

2014 தேர்தலில் 282 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. 2019 லோக்சபா தேர்தலில் 303 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைத்தது.

காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் எண்ணிக்கை

1952 தேர்தல் - 364 தொகுதிகள்

1957 - 371

1962 - 361

1967 - 283

1971 - 352

1977 - 154

1980 - 353

1984 - 415 தொகுதிகள்

1989 - 197 தொகுதிகள்

1991 - 232

1996 - 140

1998 - 141

1999 - 114

2004 - 145

2009 - 206

2014 - 44

2019 - 52 தொகுதிகள்

பாஜக இதுவரை ஆண்டு வாரியாக வெற்றி பெற்ற தொகுதிகள் எண்ணிக்கை

1984 - 2 தொகுதிகள்

1989 - 85

1991 - 120

1996 - 161 தொகுதிகள்

1998 - 182

1999 - 182 தொகுதிகள்

2004 - 138

2009 - 116

2014 - 282 தொகுதிகள்

2019 - 303

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+