Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்கா முதல் தைவான் வரை.. ஓரின திருமணத்தை அனுமதித்த நாடுகள் என்னென்ன தெரியுமா? இதோ லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இத்தகைய சூழலில் அமெரிக்கா, பிரிட்டன் முதல் தைவான் வரை மொத்தம் 34 நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ள நாடுகளின் விபரம் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தன்பாலின உறவு என்பது குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் தன்பாலின திருமணத்துக்கு (ஓரின) சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை. பல மேலை நாடுகளில் இது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை ஓரின திருமணம் என்பது அங்கீகரிக்கப்படாத ஒன்றாக உள்ளது.

How many countries where same sex marriage is legal? list here

இந்நிலையில் தான் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உத்தரவிட கோரி ஓரின திருமண ஜோடி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.

வழக்கு விசாரணையின்போது, ‛‛இந்தியாவில் ஓரின திருமணத்துக்கு இந்தியாவில் அனுமதி வழங்க வேண்டும். தற்போது அனுமதி இல்லாததால் தாங்கள் திருமணம் செய்து கொள்ள முடியாத சூழல் உள்ளது. மேலும் அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளும் கிடைக்காத நிலையில் உள்ளது'' என வாதிட்டனர். ஆனால் மத்திய அரசு தரப்பில், ‛‛இந்தியாவில் ஓரின திருமணத்தை அனுமதிக்க கூடாது. இது இந்திய கலாசாரத்திற்கு எதிரானது'' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று ஓரின திருமணம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது 4 மாறுபட்ட தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கி உள்ளனர். மேலும் இதில் நாடாளுமன்றம் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஓரின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை அறிய நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டி உள்ளது.

இந்நிலையில் தான் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. மனித உரிமைகள் பிரசார அறக்கட்டளையின் தகவலின்படி அமெரிக்கா, பிரிட்டன் முதல் தைவான் வரை மொத்தம் 34 நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கூபா, அன்டோரா, ஸ்லோவெனியா, சுவிட்சர்லாந்து, கோஸ்டரிகா, ஆஸ்திரியா, தைவான், ஈகுவடார், பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க் உள்ளிட்ட நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மால்டா, நார்வே, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், மெக்சிகோ, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, கனடா, நெதர்லாந்து, நியூசிலாந்து, போர்ச்சுக்கல், உருகுவே உள்ளிட்ட நாடுகளிலும் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு முதல் முதலாக சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய நாடு என்றால் அது நெதர்லாந்து ஆகும். நெதர்லாந்தில் கடந்த 2001 ல் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஆசிய நாடுகளை பொறுத்தமட்டில் தைவான் முதல் நாடாக ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+