Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு யோகம் தான்.. 2025-ல் மட்டும் எத்தனை நாட்கள் விடுமுறை பாருங்க.. மத்திய அரசு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் 2025 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தம் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்படும் என்ற பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்த 14 கட்டாய விடுமுறை தினங்கள் எப்போது, 3 விருப்ப விடுமுறை நாட்களை எப்போது எடுத்து கொள்ளலாம் என்பதையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பனி நேரம் காலை 9 மணி முதல்மாலை 5.30 மணி வரை ஆகும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை போக அரசு விடுமுறை தினங்களும் உண்டு.

government holidays central government government employees


ஆண்டு தோறும் எந்தெந்த நாட்களில் விடுமுறை அளிக்கப்படும் என்ற விவரத்தை முந்தைய ஆண்டே மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு எத்தனை நாள் விடுமுறை என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, 14 கட்டாய விடுமுறை தினங்களும், 3 விருப்ப விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருப்ப விடுமுறை நாட்கள் என்பது அந்ததந்த மாநிலங்களின் பண்டிகைக்கு ஏற்றபடி விடுமுறையை மத்திய அரசு அலுவலகங்கள் உரிய அனுமதி பெற்று அறிவித்துக்கொள்ள முடியும். மத்திய அரசு இன்று வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் விவரம் வருமாறு:-

1. குடியரசு தினம்
2. சுதந்திர தினம்
3. மகாத்மா காந்தி பிறந்த நாள்
4. புத்த பூர்ணிமா
5. கிறிஸ்துமஸ் தினம்

6. தசரா (விஜய் தஷமி)
7. தீபாவளி (தீபாவளி)
8. புனித வெள்ளி
9. குருநானக்கின் பிறந்தநாள்
10. ஈகைத் திருநாள்

11.பக்ரீத்
12. மகாவீர் ஜெயந்தி
13. மொஹரம்
14. முகமது நபியின் பிறந்தநாள். இந்த நாட்களில் எல்லாம் கட்டாயம் விடுமுறை தினம். அதுபோக, கீழ்க்கண்ட 12 விருப்ப விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று நாட்களை கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்.

1. தசராவிற்கு கூடுதல் நாள்
2. ஹோலி
3. கிருஷ்ண ஜெயந்தி
4. ராம நவமி
5. மகா சிவராத்திரி
6. விநாயகர் சதுர்த்தி

7. மகர சங்கராந்தி
8. ரத யாத்திரை
9. ஓணம்
10. பொங்கல்
11.ஸ்ரீ பஞ்சமி / பசந்த பஞ்சமி
12. விஷு/ வைசாகி / வைசாகடி / பாக் பிஹு / மாஷாதி உகாதி. இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+