இந்தியாவில் எங்கெல்லாம் பாஜக ஆட்சி இருக்கிறது தெரியுமா? இந்த மேப்பை பாருங்க புரியும்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தோல்வியடைந்து ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இதற்கிடையே தான் நம் நாட்டில் எந்தெந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது? என்பதை மேப் மூலம் எளிமையாக பார்க்கலாம்.
நம் நாட்டில் மொத்தம் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் 28 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு சட்டசபை தேர்தல் என்பது நடக்கும். அந்த வகையில் நம் நாட்டில் மொத்தம் 31 முதல்வர்கள் எப்போதும் இருப்பார்கள்.

டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி தோல்வியடைந்துள்ளது.பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை முடிவில் 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் பாஜகவும், 22 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. டெல்லியில் தனித்து ஆட்சியை பிடிக்க தேவையான பெரும்பான்மைக்கு 36 தொகுதிகளில் வென்றால் போதும். தற்போது பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது. அதோடு தலைநகர் டெல்லியில் இப்போது பாஜக வசமாகி உள்ளது. இதன்மூலம் நம் நாட்டில் 14வது முதல்வரை பாஜக பெற உள்ளது. இந்நிலையில் தான் எந்தெந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பாஜக ஆட்சி: அருணாச்சல பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், பாஜக, குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், மணிப்பூர், ஒடிசா, ராஜஸ்தான், திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் என்று மொத்தம் 13 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது.
பாஜக கூட்டணி ஆட்சி: ஆந்திரா, பீகார், சிக்கிம், புதுச்சேரி, நாகலாந்து, மகாராஷ்டிரா, மேகாலயா என்று மொத்தம் 7 மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.
பிற மாநிலங்கள்: கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.ஜார்கண்ட்டில் காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் கூட்டணி ஆட்சியும் நடக்கிறது. கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சியும், மிசோரமில் இசட்பிஎம் கட்சியின் ஆட்சியும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியும், தமிழகத்தில் திமுக ஆட்சியும், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும் நடக்கிறது. ஜம்மு காஷ்மீரில் முதல்வர் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது.












Click it and Unblock the Notifications