ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஆரம்பமே 10 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்.. இறங்கி அடிக்கும் இந்தியன் ரயில்வே
டெல்லி: வந்தே பாரத் ரயில்களுக்கு இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக வரவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் எப்போதும் பயணங்களுக்கு மிகவும் வசதியான மற்றும் பட்ஜெட் ஆன வழி என்றால் அது ரயில்வே தான்.. அதிலும் வந்தே பாரத் வந்த பிறகு ரயில் பயணங்கள் மேலும் வசதியான ஒன்றாக மாறிவிட்டது.

வந்தே பாரத் ரயில்கள் இப்போது நாடு முழுக்க இருக்கும் முக்கிய நகரங்களை இணைக்கிறது. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
வந்தே பாரத் ஸ்லீப்பர்: ஆனால், இதுவரை வந்தே பாரத் ரயில்கள் அமரும் வசதியை மட்டுமே கொண்டதாக இருந்தன. இதனால் பகல் நேரத்தில் மட்டுமே வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிந்தது. அதிகபட்சம் 600, 700 கிமீ வரை இடையே உள்ள நகரங்களை மட்டுமே இதனால் இணைக்க முடிந்தது. அதைத் தாண்டி அமைந்துள்ள இரு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவை இல்லாமல் போனது. எனவே, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
தொடக்கம் முதலே இந்த கோரிக்கை இருந்த நிலையில், இந்தியன் ரயில்வேயும் இது தொடர்பாக ஆய்வில் இறங்கியது. அதன்படி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் டிசைன் மாதிரிகள் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பலரையும் கவர்ந்தது. இதற்கிடையே இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகப்படுத்த இந்தியன் ரயில்வே தயாராகி வருகிறது.
எப்போது அறிமுகப்படுத்தப்படும்: ஸ்லீப்பர் கோச்சுகளுடன் கூடிய வந்தே பாரத் அடுத்த மாதம், அதாவது மார்ச் 2024 முழுமையாகத் தயாராகும் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது. முதலில் அதன் புரோடோடைப் வெளியிடப்படும் என்றும் அதைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் ஆரம்பிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவின் ரயில் பயணங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.
இப்போது இந்தியாவில் இருக்கும் அனைத்து ரயில்களைக் காட்டிலும் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அதிவேகமாகச் செல்லும் திறனைக் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. அவை நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றவாறு இருக்கும். வேகம் & செயல்திறனை அதிகரிக்கவும் பயண நேரத்தைக் குறைக்கவும் அதிக மின்சார யூனிட்கள் இதில் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.
மொத்தம் 10 ரூட்கள்: கடந்த 2019இல் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது அவை ஒவ்வொரு ரூட்டிலும் பொறுமையாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் ஆரம்பமே அதிரடியாக 10 ரூட்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா எனத் தொலைதூரத்தில் அமைந்துள்ள நகரங்களை இணைக்க இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் பயன்படும்.
வேறுபாடுகள்: வந்தே பாரத் ரயில்களில் பொதுவாக 8 அல்லது 16 பெட்டிகள் இருக்கும். அவை அனைத்துமே ஏசி வசதி கொண்டதா இருக்கும். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலைப் பொறுத்தவரை மொத்தம் 16- 20 பெட்டிகள் இருக்கும் என்றும் ஏசி மட்டுமின்றி நான் ஏசி பெட்டிகளும் இதில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் பயணிக்க முடியும். இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications