Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிட்டியிலுள்ள செலவினங்களுக்கு ஈடாக கிராமங்களில் செலவு அதிகரிப்பு: வெளியான மத்திய அரசு டேட்டா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி செலவு கிட்டதட்ட 2 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் செலவுகள் எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பதைக் காட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் புள்ளியியல் துறை இந்தியாவில் ஒரு குடும்பத்திற்கு ஆகும் மாதாந்திர செலவுகள் குறித்த டேட்டாவை வெளியிட்டுள்ளது.

How Much Monthly Household Expenses Increased In Past 20 years

கடந்த 2022 ஆகஸ்ட் முதல் 2023 ஜூலை வரையிலான தகவல்களை வைத்து இதை வெளியிட்டுள்ளனர். இந்த டேட்டாவை பார்க்கும் போது கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களின் சராசரி மாதச் செலவுகளில் உள்ள இடைவெளி என்பது கடந்த 20 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது,

மாதாந்திர செலவு: கடந்த 2022-23ஆம் ஆண்டில் MPCE எனப்படும் சராசரி தனிநபர் மாதாந்திர வீட்டுச் செலவு இந்தியாவின் கிராமப்புறங்களில் ரூ.3,773ஆக இருக்கிறது. அதேநேரம் நகர்ப்புறங்களில் அது ரூ. 6,459 ஆக இருக்கிறது. கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையேயான இடைவெளி என்பது 71.2%ஆக இருக்கிறது. இந்த இடைவெளி 2011-12இல் 83.9% ஆகவும், 2009-10ல் 88.2% ஆகவும், 2004-05ல் 90.8% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு உயர்வு: கடந்த 2022-23ஆம் ஆண்டில், இந்தியாவின் கிராமப்புற மக்கள் தொகையில் கீழ் நிலையில் உள்ள 5 சதவிகித பேரின் சராசரி செலவு ரூ. 1,373ஆக இருந்துள்ளது. இதே காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் சராசரி செலவு ரூ.2,001ஆக இருந்துள்ளது. அதேநேரம் டாப் 5 சதவிகித பேருக்கு ஆகும் சராசரி கிராமப்புறங்களில் ரூ. 10,501ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ. 20,824ஆகவும் இருக்கிறது.

கடந்த 2004-05 நிதியாண்டில் கிராமப்புற பகுதிகளில் மாதாந்திர செலவு ரூ.579ஆக இருக்கும் நிலையில், நகரப்புறங்களில் அது 1105ஆக இருக்கிறது. 10 ஆண்டுகள் கழித்து இப்போது பார்க்கும் போது கிராமப் புறங்களில் செலவு 3773ஆகவும் நகரப்புறங்களில் அது 6459ஆகவும் இருக்கிறது. அதாவது 20 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் செலவு 6.5 மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல நகரங்களில் செலவுகள் 5.8 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது கிராமங்களில் 552%, நகரங்களில் 484% செலவு அதிகரித்துள்ளது.

மாநில வாரியாக தகவல்: மாநில வாரியாக செலவுகளை ஆய்வு செய்யும் போது சிக்கிம் மாநிலத்தில் செலவு அதிகபட்சமாக இருக்கிறது. சிக்கிம் மாநிலத்தில் கிராமப்புறங்களில் மாதாந்திர செலவு ரூ. 7,731ஆக இருக்கும் நிலையில், நகரப்புறங்களில் செலவு ரூ.12,105ஆக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் செலவு மிகக் குறைவாக இருக்கிறது. கிராமப்புறங்களில் மாதாந்திர செலவு ரூ.2,466 மற்றும் நகர்ப்புறங்களில் மாதாந்திர செலவு ரூ. 4,483ஆக உள்ளது.

சராசரி மாதாந்திர உணவு செலவு என்று வரும் போது கிராமப்புறங்களில் அது ரூ.1,750ஆக இருக்கிறது. அதேநேரம் நகர்ப்புறங்களில் அது ரூ. க உள்ளது. உணவு தவிர்த்துவிட்டுப் பிற செலவுகள் என்று வரும் போது கிராமப்புறங்களில் அது ரூ. 2,023, நகரப்புறங்களில் அது ரூ. 3,929ஆக இருக்கிறது.
மத்திய அரசு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை இந்த மாதாந்திர செலவுகள் குறித்த தகவல்களை வெளியிடும். இருப்பினும், கடந்த 2017-18 நிதியாண்டிற்கான தரவுகள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+