"அயோத்தி ராமர் கோயில் தான் டாப்!" மோடியின் சாதனைகள் என்ன? 5ம் இடத்தில் ஆச்சரியம்- வெளியான புது சர்வே
டெல்லி: பிரதமர் மோடியின் ஆட்சி எதற்காக நினைவுகூரப்படும் என்ற கேள்விக்குப் பொதுமக்கள் ஒவ்வொரு வகையில் பதிலளித்துள்ளனர். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த இந்தியா டுடே மூட் ஆஃப் தி நேஷன் சர்வே என்ற கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால், பாஜக தலைமையிலான என்டிஏ மிகப் பெரிய வெற்றியை அடையும் என்று கூறப்பட்டுள்ளது.

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 335 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 166 இடங்களும் பிற கட்சிகளுக்கு 42 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில்: அதேபோல பிரதமர் மோடி வரலாற்றில் எதற்காக நினைவு கூரப்படுவார் என்ற ஒரு கேள்வியும் இதில் இடம்பெற்றுள்ளது. அதில் பல்வேறு தரப்பினரும் பல வித பதில்களை அளித்துள்ளனர். இந்த சர்வேபடி, ராமர் கோயில் கட்டுமானம் என்பது தான், நரேந்திர மோடி அரசின் முக்கிய சிறப்பம்சமாகும் இருக்கும் என்று 42% பேர் கூறியுள்ளனர். அயோத்தியில் நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டப்பட்டது.
அங்கே கடந்த ஜன.22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்த நிலையில், அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புப் பூஜைகளைச் செய்தார். அந்த ராமர் கோயிலில் குழந்தை வடிவிலான ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. பல காலமாக பாஜகவின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றிருந்த இந்த ராமர் கோயில் கட்டுமானம் மோடி ஆட்சியில் நடந்துள்ளது. இந்த ராமர் கோயில் தான் மோடி அரசின் சாதனை என்று பொதுமக்களும் கருதுவதாக 42% மக்கள் கூறுகின்றனர்.
அடுத்து என்ன: ராமர் கோயிலுக்கு அடுத்துப் பார்க்கும் போது, இந்தியாவின் இமேஜ்ஜை சர்வதேச அரங்கில் உயர்த்தியதே பிரதமர் மோடி சாதனை என்று 19 சதவீதம் பேர் கருதுகின்றனர். கடந்தாண்டு தான் இந்தியா மிகச் சிறப்பாக ஜி20 மாநாட்டை வெகு சிறப்பாக நடத்திக் காட்டியது. அதேபோல சர்வதேச அளவில் நடக்கும் பல விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தான் இந்தியாவின் இமேஜ்ஜை சர்வதேச அரங்கில் உயர்த்தியது மோடியின் மிகப் பெரிய சாதனை என்று 19% பேர் கருதுகின்றனர்.
டாப் 5: அதேபோல 12 சதவீதம் பேர் ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது நரேந்திர மோடி அரசின் மற்றொரு சாதனை என்று கூறியுள்ளனர். காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தைத் தரும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவோம் என்பதும் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகப் பல காலமாக இருந்தது. அதையும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றிகரமாகச் செய்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.
அடுத்து 9 சதவீதம் பேர் பாகிஸ்தான் மீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக் பிரதமர் மோடியின் முக்கிய சாதனையாகக் கருதுகிறார்கள். தொடர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்காக 6 சதவீதம் பேர் முக்கிய சாதனையாகக் கருதியுள்ளனர். பிரதமர் மோடி கடந்த 2016இல் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். அன்று புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த 5 விஷயங்களையும் தான் பிரதமர் மோடியின் டாப் 5 சாதனைகளாகப் பொதுமக்கள் கருதுவதாக இந்த மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அதேபோல பிரதமர் கொரோனா பாதிப்பைக் கையாண்ட விதம் என்று 6 சதவீதம் பேரும், ஊழலுக்கு எதிரான மோடியின் போராட்டம் என்று 5 சதவீதம் பேரும் கூறியுள்ளதாக இந்த மூட் ஆப் தி நேஷன் சர்வே கூறியுள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications