வித்தியாசமாக இருந்த ஷூ.. லோக்சபாவில் புகை குண்டுகளை கடத்தி வந்தது எப்படி.. வெளியான பகீர் தகவல்
டெல்லி: நாடாளுமன்றத்தில் நடந்த ஸ்ப்ரே அட்டாக் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அவர்கள் அந்த புகை குப்பிகளை உள்ளே எப்படி எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த சிலர் ஸ்ப்ரே அட்டாக் . இருவர் நாடாளுமன்றத்தில் புகுந்து புகை வரும் குப்பிகளை வீசிய நிலையில், மேலும் இருவர் வெளியே பிரச்சினை செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பிரச்சினை செய்த அவர்கள் இருவரையும் உள்ளே இருந்த எம்பிக்களே பிடித்து போலீசாரிடம் கொடுத்தனர். அதேபோல வெளியே பிரச்சினை செய்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ப்ரே: இந்த நாடாளுமன்ற ஸ்ப்ரே அட்டாக் தொடர்பாகத் தொடர்ந்து ஷாக் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே லோக்சபா உள்ளே சென்று ரகளையில் ஈடுபட்டவர்கள் அந்த புகைக் குண்டுகளை எப்படி உள்ளே எடுத்து வந்தார்கள் என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவர் நாடாளுமன்றத்தில் உள்ளே சென்று வண்ண புகை வரும் குப்பிகளை வீசியுள்ளனர். ரகளையில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். கால் ஷூவின் அடிப்பகுதியை வெட்டி எடுத்து, அதில் இந்த புகை குப்பிகளை வைத்துப் பதுக்கி உள்ளே எடுத்துச் சென்றதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்,. இடது கால் ஷூவில் தான் இந்த புகை குப்பிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
அமைதியான ஆசிரியர் டூ நாடாளுமன்ற ஸ்ப்ரே அட்டாக் "மாஸ்டர் மைண்ட்.." யார் இந்த லலித் ஜா! பகீர் பின்னணி
எப்படி: இடது கால் ஷூவின் அடிப்பகுதியை வெட்டி எடுத்து, அதில் தான் இந்த குப்பிகளை மறைத்து வைத்துள்ளதாக டெல்லி போலீசார் தங்கள் முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளதாகப் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சகார் சர்மா ஸ்பெஷல் ஷூ மற்றும் காக்கி நிற சாக்ஸ் அணிந்துள்ளார். இந்த ஸ்பெஷல் ஷூ, சாகர் ஷர்மாவின் சொந்த ஊரான லக்னோவில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஷூவை தயாரித்துக் கொடுத்தவர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
அதேபோல மனோரஞ்சன் அணிந்திருந்த வலது கால் ஷூவிலும் கூட இதேபோல மறைத்து வைத்திருக்கும் பகுதி இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்துக் கூடுதல் விசாரணைக்கு அந்த ஷூ மற்றும் சாக்ஸை அவர்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதேபோல போலீசார் அவர்கள் பயன்படுத்திய அந்த புகை குப்பிகளையும் கைப்பற்றினர்.
வாசகங்கள்: மேலும், அவர்களிடம் இருந்து இரண்டு துண்டுப் பிரசுரங்களையும் கைப்பற்றி உள்ளனர். அதில் 'ஜெய் ஹிந்த்' என்று எழுதப்பட்டிருந்த நிலையில், அத்துடன் இந்தியக் கொடியின் நிறங்கள் இருந்தது. மற்றொரு நோட்டீஸில் மணிப்பூரில் இன வன்முறை குறித்த கருத்துகள் இருந்தது.
முன்னதாக, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை எழுப்ப இந்த நோட்டீஸ்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், பிரதமர் மோடி அப்போது அவையில் இல்லாததால் அதை அவர்களால் செய்ய முடியவில்லை. மேலும், பிரதமர் மோடியை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்துத் தருவோருக்கு சுவிஸ் வங்கியிடமிருந்து ரொக்கப் பரிசும் வழங்குவதாகக் கூறி ஒரு நோட்டீஸும் அதில் இருந்துள்ளது.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், போலீசார் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சிலர் தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications