யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. எப்படி பார்ப்பது? மெயின் தேர்வுக்கு 14161 பேர் தகுதி
டெல்லி: கடந்த மே 25ம் தேதி நடந்த யுபிஎஸ்சி தேர்வு நடந்தது. இதன் முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் மெயின் தேர்வுக்காக 14,161 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை upsc.gov.in மற்றும் upsconline.nic.in இணையதளங்களில் பார்க்கலாம்.
நாடு முழுதும் காலியாக உள்ள 979 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை மத்திய அரசின்தேர்வாணையமான யுபிஎஸ்சி வெளியிட்டது. கடந்த மே மாதம் 25ம் தேதி இரண்டு ஷிப்ட்களாக தேர்வு நடந்தது.

அன்றைய தினம் காலையில் பேப்பர் 1 (General Studies) தேர்வும், அன்று மதியம் பேப்ர் 2 (CSAT) தேர்வும் நடந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர்.
இதையடுத்து இன்று மாலையில் யுபிஎஸ்சியின் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை upsc.gov.in மற்றும் upsconline.nic.in என்ற இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் அடுத்தக்கட்டமாக நடக்கும் மெயின் தேர்ஷக்கு 14,161 பேர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தேர்வாகி உள்ளனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களின் எண்கள் அதிகாரப்பூர்வ ரிசல்ட்டின் பிடிஎப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் அடுத்தக்கட்ட தேர்வுக்கான விவரங்களை வரும் 16 ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். பெண்கள், பிடபிள்யூபிடி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் என்பது கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான மதிப்பெண், கட்ஆஃப் மதிப்பெண், கேள்விக்கான விடைகள் உள்ளிட்டவை முழு தேர்வுகளும் முடிவடைந்த பிறகு வெளியிடப்படும்.
இந்த நடைமுறையில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தேர்வர்கள் டெல்லியல் உள்ள யுபிஎஸ்சியின் டோல்பூர் ஹவுஸ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இல்லாவிட்டால் 011 -23385271, 011 - 23098543, 011 - 23381125 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த எண்களை அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்
இன்றைய தேர்வு முடிவில் 7004555, 6305469, 6413314, 6610122 என்ற பதிவெண் கொண்ட 4 பேரின் ரிசல்ட் வெளியிடப்படவில்லை. மற்றவர்களின் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
