கோடி நன்மை கிடைக்குமாம்! அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில்... வீட்டிலேயே பூஜை செய்வது எப்படி
டெல்லி: ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறும் நிலையில், அதற்கு வீட்டிலேயே எப்படி பூஜை செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி தொடங்கி பலரும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக அயோத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமர் சிலை: அயோத்தியில் கடந்த ஜனவரி 18ஆம் தேதி 51 இன்ச் ராமர் சிலை கருவறையில் வைக்கப்பட்டது. இந்த ராமர் சிலையைக் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் செதுக்கப்பட்டதாகும். இந்த சிலை நாளை கும்பாபிஷேகத்தின் போது மதியம் 12.30 மணிக்குப் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. நாளை நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வதால் அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களால் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் வீட்டிலேயே எப்படி ராமருக்கு பூஜை செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். இந்த முறையைப் பின்பற்றி நீங்கள் வீட்டிலேயே பூஜை செய்யலாம்.
வீட்டிலேயே பூஜை: ராமர் சிலை பிரதிஷ்தா விழா ஜனவரி 22, 2024 அன்று மதியம் 12:20 மணி முதல் 12:45 மணி வரை நடைபெறும் நிலையில், அப்போது ஓம் ராம் ராமாய நம என்ற வாசகத்தை நீங்கள் வீட்டில் எழுதி வைக்க வேண்டும். ஓம் ராம் ராமாய நம என்று நீங்கள் வீட்டில் ஓத வேண்டும். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் இப்படி வீட்டிலேயே பூஜை செய்யலாம்.
உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை ரூமை முதலில் சுத்தம் செய்யுங்கள். குளித்துவிட்டு நறுமணமிக்க சந்தனத்தை நீங்கள் நெற்றியில் வையுங்கள். புதிய, வெளிர் நிற ஆடைகளை அணிந்து பூஜை செய்யுங்கள். ராமர் சிலை ஒன்றை வாங்கி அதற்குப் பால், தேன் மற்றும் பிற புனித பிரசாதங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள். இது சிலையை மட்டுமல்ல, வளிமண்டலத்தையும் தூய்மைப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
என்ன செய்யணும்: ராமர் சிலைக்குக் கீழே பூஜை ரூமில் சிறிய ரங்கோலி கோலத்தைப் போட்டு அலங்கரிக்கவும். புனிதமான "ஓம்" சின்னத்தை வரையவும். இது உங்கள் பூஜை ரூமை புனிதமானதாக மாற்றும். பூஜை ரூமில் மேஜை ஒன்றை வைத்து அதை ஒரு தூய்மையான சிவப்பு துணியைப் போர்த்துங்கள்.. மேலும், அங்கே ஒரு பிடி சமைக்காத அரிசியை வைக்கவும் இந்த நெல் படுக்கையில், ஒரு பளபளக்கும் செப்பு கலசத்தை வைக்கவும்.
சந்தனம், குங்குமம் வைத்து கலசத்தை அலங்கரிக்கவும். பின்னர், அதற்கு மேலே தேங்காயை வைக்கவும். மேலும் சில பழங்களை அங்கே வைக்கலாம். இதை உங்களை நோக்கி வைத்துக்கொள்ளுங்கள். இதன் பிறகு உங்கள் பூஜையை ஆரம்பிக்கலாம். "ஓம் ராம் ராமாய நம" என்ற ராம மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது ராமரை அவரது பிரகாச வடிவில் காட்சிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இறைவன் உடன் இணைந்து இருப்பது போல நினைத்துக் கொள்ளுங்கள். அவரது ஆசீர்வாதங்கள் உங்களுக்குக் கிடைப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். இந்த முறையைப் பின்பற்றி பூஜைகளைச் செய்தால் உங்களுக்குக் கோடி நன்மை கிடைக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications