கொரோனா உட்பட அனைத்து நோய்களை விரட்ட உதவும் நோய் எதிர்ப்பு சக்தி.. அதிகரிக்கும் வழிமுறைகள் என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒருவர் கொரோனா உள்ளிட்ட எந்த நோயிலிருந்து குணமடையவும், உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியமானதாக உள்ளது, அவற்றை சில முறைகளைப் பின்பற்றி அதிகப்படுத்தலாம்.

நாட்டில் தற்போது கொரோனா வைரசின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது.

மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. கொரோனா வைரசை எதிர்கொள்ளத் தேவையான முக்கிய ஆயுதங்களில் ஒன்று நோய் எதிர்ப்பு சக்தியாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி ஏன் முக்கியம்

நோய் எதிர்ப்பு சக்தி ஏன் முக்கியம்

ஒருவரது உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், அது உடலைத் தாக்கும் எந்தவொரு புதிய நோய்க்கு எதிராகவும் எளிதாக எதிர்த்துப் போராடும். அப்படியிருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அது தீவிரமடையாது. சுருங்கச் சொன்னால் கொரோனாவில் இருந்த தப்ப வலுவான நோய் எதிர்ப்பு சக்தி அவசியமாகும்

வாழ்க்கை முறை

வாழ்க்கை முறை

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அறிக்கைப்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒருவர் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் வாழ்க்கை முறையைச் சிறப்பாக மாற்றிக்கொள்வது தான்.

Array

Array

புகைபிடிக்காமல் இருப்பது, ஆல்கஹால் பயன்படுத்துவதைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது, அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது, உடற்பயிற்சி, சரியான எடையைப் பராமரிப்பது, போதியளவிலான தூக்கம் பெறுவது, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, அடிக்கடி கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட விஷயங்கள் நாம் நோய்வாய்ப்படும் ஆபத்துகளைக் குறைக்கும். இது நமது உடலையும் வலுவானதாக மாற்றும்.

தடுப்பூசிகள்

தடுப்பூசிகள்


குறிப்பாக, நோய்களுக்குச் சரியான நேரத்தில் தடுப்பூசி போட வேண்டும். ஏனெனில் தடுப்பூசிகள் தான் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முதன்மையானவையாகும். அதேபோல வயதும் ஒரு முக்கிய காரணமாகும். ஒருவருக்கு வயது அதிகமாக அதிகமாக அவரது நோய் எதிர்ப்பு திறன் குறை தொடங்கும். இதைக் கருத்தில் கொண்டே நாம் அனைத்தையும் திட்டமிட வேண்டும்.

வயது

வயது

வயதாகும் போது டி செல்களின் எண்ணிக்கை குறைவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். அல்லது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் உயிரணுக்களை உருவாக்கும் ஸ்டெம் செல்களை உற்பத்தி செய்வது குறைவதாலும்கூட நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம், இதிலிருந்த தப்பிக்க நம் தினசரி உட்கொள்ளும் உணவுகளில் புரதச்சத்து உள்ள பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம், இதன் மூலம் வயதானாலும் நோய் எதிர்ப்பு சக்தி மோசமாகாமல் தடுக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+