அதிரடி ட்விஸ்ட்! பான் எண் ஆதார் இணைப்பில் இப்படி ஒரு விஷயம் இருக்கா? ஏற்கனவே லிங்க் பண்ணீட்டீங்களா?
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நெருங்கி விட்டது. எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம்.
டெல்லி: பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நெருங்கி விட்டது. உங்கள் பான் எண்ணை மார்ச் 31, 2023க்குள் இணைக்காவிட்டால் ஏப்ரல் 1 முதல் உங்கள் பான் எண் செயலிழந்துவிடும், அதன்பிறகு பான் கார்டை பயன்படுத்தி அரசின் முக்கிய சேவைகளைப் பெற முடியாது.
பிறந்த தேதி பான் கார்டு, ஆதார் ஆகிய இரண்டு ஆவணங்களுடனும் பொருந்தினால் மட்டுமே பான் ஆதாரை இணைக்க முடியும் என்பது முக்கியமானதாகும்.
வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல பான் கார்டுகளை வைத்துக் கொண்டு சிலர் தொடர்ந்து ஏமாற்றுவதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து பான் கார்டு ஆதார் எண்ணை இணைக்கும் விஷயத்தை மத்திய அரசு கையில் எடுத்தது. பான் எண் , ஆதார் எண்ணை இணைக்க தொடர்ந்து அரசு கால அவகாசம் வழங்கி வந்தது.
பான் கார்டு ஆதார் எண் இணைப்பு சாத்தியமானால் மட்டுமே ஒருவரின் வருமானத்தை அரசால் கண்டுபிடிக்க முடியும்,. அத்துடன் அதற்கான வரியையும் விதிக்க முடியும். மேலும் பான் கார்டு ஆதார் எண்ணை இணைத்தால் யாரும் வருமான வரித்துறையில் ஏமாற்ற முடியாது. பணம் எப்படியெல்லாம் வந்தது. அது எப்படி வெளியேறியது என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும், அதற்குதான் அரசு இந்த முயற்சியை செய்தது.

காலக்கெடு ஏன்?
பான் எண்ணை ஆதாருடன் இணைக்க மார்ச் 31, 2023 தான் கடைசி என்று காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. பலமுறை காலகெடு வழங்கிய மத்திய அரசு இனி பான் கார்டு ஆதார் இணைப்பு காலக்கெடு வழங்குவது சந்தேகம் என்கிறார்கள். அத்துடன் ஒருவர் பான் எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால் அவருக்கு அரசின் பல்வேறு முக்கிய நிதி சேவைகளை பெற முடியாது. பான் கார்டு செயல் இழந்தால் ஏற்படப்போகும் பாதிப்புகளின் விவரங்களை இப்போது பார்ப்போம். 1) செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி நபர் வருமானத்தை தாக்கல் செய்ய முடியாது . 2) நிலுவையில் உள்ள வருமானங்கள் செயலாக்கப்படாது. 3) செயல்படாத PAN களுக்கு நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது. 4) பான் செயலிழந்தவுடன், குறைபாடுள்ள வருமானம் போன்ற நிலுவையில் உள்ள நடவடிக்கைகளை முடிக்க முடியாது. 5) PAN செயலிழந்ததால் அதிக விகிதத்தில் வரி கழிக்கப்பட்டே ஆக வேண்டும்.

உங்கள் பான் எண்
உங்கள் பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்?
i) வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும் - www.incometax.gov.in.
என்ற லிங்கில் சென்று கிளிக் செய்யவும். அங்கு, 'Link Aadhaar Status' ('இணைப்பு ஆதார் நிலையை') சரிபார்க்க ஒரு விருப்பத்தைக் காணலாம். நீங்கள் அதை கிளிக் செய்ய வேண்டும்.
இதற்குப் பிறகு, உங்கள் கணினி அல்லது மொபைலில் புதிய திரையைப் பார்ப்பீர்கள். இங்கே, நீங்கள் உங்கள் பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளிட வேண்டும். நீங்கள் விவரங்களை நிரப்பியதும், 'View Link Aadhaar Status'. ('இணைப்பு ஆதார் நிலையைக் காண்க' )என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார்-பான் நிலை பக்கத்தில் காட்டப்படும். எடுத்துக்காட்டு: உங்கள் பான் (PAN ஆதார்) இணைக்கப்பட்டிருந்தால், ஆதார் எண்ணுடன் (ஆதார் எண்) இணைக்கப்பட்டுள்ளது என காட்டும். ஆனால் ஏற்கனவே இணைக்கப்படாத நிலையில், www.incometax.gov.in இல் ரூ. 1,000 கட்டணம் செலுத்திய பிறகு, சரியான ஆதாருடன் PANஐ இணைக்க முடியும்.

ஆதார் பான் இணைப்பு
ஆன்லைனில் ஒருவர் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் எவ்வாறு இணைப்பது என்பதை இப்போது பார்ப்போம். அதற்கு நீங்கள் முதலில் வருமான வரித் துறை போர்டல் வழியாக உள்ளே செல்ல வேண்டும்.. முதல் படிநிலை: Incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லுங்கள், இது I-T துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலாகும். 2வதாக வலைப்பக்கத்தின் 'Quick Links' ('விரைவு இணைப்புகள்') பிரிவின் கீழ் உள்ள 'Link Aadhaar' ('லிங்க் ஆதார்' ) விருப்பத்தை கிளிக் செய்யவும். படி 3: இது பான் எண், ஆதார் எண் மற்றும் உங்கள் பெயர் போன்ற தேவையான விவரங்களை உள்ளிட வேண்டிய புதிய பக்கத்திற்கு உங்களைத் அழைத்து செல்லும் அதில் விவரங்களை பதிவு செய்து ஆதார் பான் எண்ணை இணைத்துவிடலாம்.

மொபைலில் எப்படி
எஸ்எம்எஸ் வழியாக எப்படி பான் கார்டு ஆதார் எண்ணை இணைப்பது என்பதை பார்ப்போம். படி 1: எஸ்எம்எஸ் அனுப்ப மொபைல் சாதனத்தில் 567678 அல்லது 56161 ஐ டயல் செய்யவும். அதில் UIDPAN (10 இலக்க பான் கார்டு எண்), 12 இலக்க ஆதார் அட்டை எண் ஆகியவற்றை ஸ்பேஸ் விட்டு டைப்பு செய்து அனுப்ப வேண்டும். படி 2: அதைத் தொடர்ந்து, பான்-ஆதார் இணைப்பின் நிலையை SMS இல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

பிறந்த தேதி
உங்களது பிறந்த தேதி, பான் கார்டு, ஆதார் ஆகிய இரண்டு ஆவணங்களுடனும் பொருந்தினால் மட்டுமே ஆதார் மற்றும் பான் இணைக்கப்படும். வருமான வரித் துறைக்கான கொள்கையை அமைக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) சுற்றறிக்கையில், மார்ச் 30 அன்று பான் காலாவதியாகும் போது, I-T சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் பான் கார்டு ஆதார் எண்ணை இணைக்காதவரே அதற்கு பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பான் கார்டு, ஆதார் எண்ணை உடனே இணைத்துவிடுங்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications