"பிரிட்டனை ஆக்கிரமித்துவிடுவார்கள்.!" ரிஷி சுனக்கிற்கு எதிராக இன ரீதியான அட்டாக்! நோவா பொளேர் பதிலடி
டெல்லி: ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றதற்கு வெள்ளையர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு கமெடியன் ட்ரெவர் நோவா பதிலடி கொடுத்துள்ளார்.
பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர் வெறும் 42 வயதில் இப்போது பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்று உள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டனில் தலைமை பொறுப்பிற்கு வருவது இதுவே முதல்முறை. அதேபோல இந்து ஒருவர் தலைமை பொறுப்பிற்கு வருவதும் இதுவே முதல்முறையாகும்.

பிரிட்டன் பொருளாதாரம்
பிரிட்டன் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ள சூழலில் அதை மீட்கும் பெரிய பொறுப்பு இப்போது ரிஷி சுனக்கிடம் வந்துள்ளது. ரிஷி சுனக்கிற்கு பலரும் வாழ்த்து தெரிவிக்கும் போதிலும், சிலர் ரிஷி சுனக்கை விமர்சித்து வருகின்றனர். அதுவும் இன ரீதியாகவே விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக பிபிசி ரேடியோவில் வெள்ளையர் ஒருவர் கூறியதற்கு கமெடியன் ட்ரெவர் நோவா தனது டேய்லி ஷோவில் பதிலடி கொடுத்து இருந்தார்.

அதிருப்தி
அந்த வீடியோ இணையதளங்களில் நேற்றைய தினம் வேகமாகப் பரவியது. இந்தச் சூழலில் ட்ரெவர் நோவா அந்த நிகழ்ச்சிக்கு நடுவே அங்கு வந்திருந்த பார்வையாளர்களிடம் பேசிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளனர். அதில் அவர், "பிரிட்டனில் வெள்ளையர் அல்லாத ஒருவர் முதல்முறையாகப் பிரதமராகி உள்ளார். ஆனால், இதற்குச் சிலர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

உங்களுக்கு என்ன பிரச்சினை
இது அவர்களின் (வெள்ளையர்கள்) மூதாதையர்கள் உலகின் மற்ற நாடுகளுக்கு என்ன செய்தார்கள் என்பதை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இப்போது பலரும் இந்தியர்கள் பிரிட்டனைக் கைப்பற்றப் போகிறார்கள் என்றும் அதுவரை அவர்கள் ஓயப்போவது இல்லை என்றும் சொல்கிறார்கள். அவர்களைப் பார்த்து நான் ஒன்று தான் கேட்கிறேன். அதனால் என்ன. அவர்கள் அதிகாரத்திற்கு வருவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை.

அச்சம் ஏன்
ஏன் இதற்கு இப்படி அஞ்சுகிறீர்கள்? முன்பு ஆங்கிலேயர்களால் ஒடுக்கப்பட்ட இவர்கள் ஆட்சிக்கு வருவதை அவர்கள் விரும்புவதில்லை.. கடந்த காலங்களில் ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு என்ன செய்தார்களோ.. அதை மீண்டும் எங்கு தங்களுக்குச் செய்துவிடுவார்களோ என்ற அச்சமே அவர்கள் இப்படிச் சொல்லக் காரணமாக உள்ளது. ஆனால், உண்மையில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை.

தேவையில்லை
உலகில் பிரிட்டிஷ் ஆட்சி செய்த எல்லா இடங்களுக்கும் செல்லுங்கள்.. தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்று பாருங்கள். அங்கு மக்கள் யார் மீதும் கோபமாக இல்லை. அமெரிக்காவில் பராக் ஒபாமா அதிபரானபோது, அவர் வெள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கவில்லை. எனவே, ஆங்கிலேயர்கள் ஒரு காலத்தில் எப்படி நடந்து கொண்டார்களோ அதேபோல நடந்து கொள்வார்கள் என அஞ்சுவது நியாயமற்றது.

ஜமைக்கா மன்னர்
இன்னும் சிலர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் எப்படி பிரதமராக வரலாம் எனக் கேட்கிறார்கள். நீங்கள் ஒன்றை மறந்துவிடாதீர்கள். இன்னும் மன்னர் இன்னும் சார்லஸ் தான் ஜமைக்காவின் மன்னராக இருக்கிறார். அதைப் பற்றி முதலில் நீங்கள் சிந்திக்க வேண்டும். இதுபோன்ற கருத்துகளைச் சொல்லுவதன் மூலம் அவர்கள் தாங்கள் யார் என்பதை சமூகத்திற்குக் காட்டிவிடுகிறார்கள்" என்றார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications