கொடுமை! மருத்துவர் அலட்சியத்தால் சிறுமிக்கு எய்ட்ஸ் பாதிப்பு! அடுத்து செஞ்ச காரியம் இருக்கே..கொடூரம்
எய்ட்ஸ் கண்டறியப்பட்ட சிறுமி நள்ளிரவில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்
டெல்லி: மருத்துவர் ஒருவரின் அலட்சியத்தால் சிறுமிக்கு எதிர்பாராத விதமாக எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் எய்ட்ஸ் கண்டறியப்பட்டவுடன், அச்சிறுமியையும் உறவினர்களையும் மருத்துவமனை நள்ளிரவில் வலுக்கட்டாயமாகவெளியேற்றியுள்ளது.
நமது நாட்டில் மருத்து ரீதியில் மிகவும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. நமது நாட்டில் வேறு எந்த மாநிலங்களைவிட மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
இதனால் நமது மாநிலத்தில் பெரும்பாலும் தக்க நேரத்தில் உரியச் சிகிச்சை வழங்கப்படும். இருப்பினும், மற்ற மாநிலங்களில் மருத்துவர்கள் போதியளவில் இருப்பதில்லை. இதனால் பணி அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பல தவறுகள் நடந்துவிடுகிறது.

சிறுமிக்கு எய்ட்ஸ்
அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. இங்கு மருத்துவரின் அலட்சியம் காரணமாகச் சிறுமி ஒருவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உபி மாநிலத்தில் இருக்கும் எட்டா ராணி அவந்தி பாய் லோதி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள மருத்துவர் ஒரே சிரஞ்சை பல சிரிஞ்சை பல நோயாளிகளுக்குப் பயன்படுத்தியதால் சிறுமி எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

எப்படி
ஒரே சிரஞ்சை நிச்சயம் ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற போதிலும் அதை புறந்தள்ளி, இந்த மருத்துவர் ஒரே சிரஞ்சை பலருக்குப் பயன்படுத்தியுள்ளார். இதனிடையே இந்த விவகாரம் குறித்துச் சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்தார்.. இந்த விவகாரத்தில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால்.. சம்மந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இரவோடு இரவாக
இந்த விவகாரம் தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். ஒரே சிரிஞ்சை வைத்து அந்த மருத்துவர் பல குழந்தைகளுக்கு ஊசி போட்டதாகப் பெற்றோர் மாவட்ட நீதிபதி அங்கித் குமார் அகர்வாலிடம் தெரிவித்தனர். கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி தங்கள் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சில நாட்களில் அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாகக் கூறி இரவோடு இரவாக மருத்துவமனையில் இருந்து தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விசாரணைக்கு உத்தரவு
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், இந்த புகாரைத் தலைமை மருத்துவ அதிகாரி விசாரிப்பார் என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணை முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் தலைமை மருத்துவ அதிகாரி உமேஷ் குமார் த்ரிபாதி தெரிவித்தார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடவடிக்கை
இது தொடர்பாக உபி துணை முதல்வர் பிரகாஷ் பதக், "எட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல நோயாளிகளுக்கு ஒரே சிரிஞ்ச் மூலம் ஊசி போடப்பட்டதாகவும் இதனால் சிறுமி ஒருவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் யாரேனும் தவறு செய்திருந்தால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications