Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3வது அலை இந்தியாவை எப்படி தாக்கும்.. நோய் தடுப்பு ஆலோசனை குழு தலைவர் விரிவான விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) தலைவர் டாக்டர் என்கே அரோரா இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) தொற்று தொடர்பான பல்வேறு விஷயங்களை விரிவாக விவரித்தார்.

கோவிட் -19 பணிக்குழுவின் தலைவரான டாக்டர் என்கே அரோரா கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து கூறுகையில், கடந்த பல வாரங்களாக, கேரளா மற்றும் சில வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவின் சில மாவட்டங்களில் என அதிகளவில் கொரோனா பாதிப்ப ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் 30,000-45000 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்.

ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பரவிய SARS-COV-2 வைரஸ்களின் மரபணு பகுப்பாய்வை நாங்கள் ஆய்வு செய்ததில், புதிய மாறுபாடுகள் எதுவும் தோன்றவில்லை. ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட சீரோ-சர்வே அடிப்படையில், இன்னமும் தடுப்பூசி போடதாவர்கள் இரண்டாவது அலையின் கடைசி கட்டத்தின் ஒரு பகுதியாக பாதிக்கப்படுகிறார்கள்.

எப்படி தாக்கும்

எப்படி தாக்கும்

ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட கடைசி செரோ சர்வேயில், 66% முதல் 70% வரை மக்கள் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது, சுமார் 30% மக்கள் இன்னும் தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது என்பதைக் குறிக்கிறது. தடுப்பூசி போடப்படாவிட்டால், எந்த நேரத்திலும் தொற்று ஏற்படலாம் . தடுப்பூசி போடாத 30% மக்கள் தொற்றால் புதிதாபக பாதிக்கப்படலாம். அவர்களில் பலர் கடுமையான நோய் பாதிப்புக்கு உள்ளாகலாம். இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாம் பார்த்தது போல் நடக்கும் அபாயமும் உள்ளது.

பங்களிப்பு

பங்களிப்பு

எனவே கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான பொருத்தமான நடத்தை பின்பற்றுவது அவசியம். இதுவே மிகவும் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக வரவிருக்கும் பண்டிகை காலங்கள் (மக்கள் கூட்டத்தால்), புதிய பிறழ்வு தோன்றுவதற்கும்ம், கோவிட் -19 இன் மூன்றாவது அலையின் வருகைக்கு பங்களிக்கும் அபாயமும் உள்ளது.

தடுப்பூசி

தடுப்பூசி

டெல்டா வகைக்கு எதிரான கோவிட் -19 தடுப்பூசிகளின் செயல்திறன் எப்படி இருக்கிறது என்று கேட்கீறர்கள். நாம் பொதுவெளிகளில் காணும் தடுப்பூசிகளின் செயல்திறன் மதிப்புகள் பெரும்பாலும் அறிகுறி நோய்க்கு எதிரான செயல்திறனைக் குறிக்கின்றன. இது தடுப்பூசிக்கு தடுப்பூசி மாறுபடும். 60-90% செயல் திறன் உடையவை ஆகும். எனினும் கோவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதில் பெரும்பாலான தடுப்பூசிகள் போதுமான அளவு பயனுள்ளதாக இல்லை. எனவே, தடுப்பூசி போட்ட பிறகும், அந்த நபர் தொற்றுநோயை பரப்ப முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

கடுமையான நோய்

கடுமையான நோய்

கடுமையான நோய், மருத்துவமனை தேவை மற்றும் இறப்பைத் தடுப்பதற்கான செயல்திறன் எப்படி உள்ளது என்பதுதான் கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த முக்கிய மதிப்புகள் ஆகும். இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் தற்போது கிடைக்கும் அனைத்து தடுப்பூசிகளும் 90-95% க்கும் அதிகமானவை நோயாளியை கடுமையான நோய் மற்றும் இறப்பிலிருந்து பாதுகாக்கிறது.

தோல்வி

தோல்வி

ஐசிஎம்ஆரின் ஆராய்ச்சி, கோவிட் -19 நோய்த்தொற்று உள்ள பெரும்பாலான நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை பயனுள்ளதாக இல்லை. உலகின் பிற பகுதிகளிலிருந்து இதே போன்ற ஆய்வுகள் இறப்பு அல்லது மருத்துவமனையில் தங்குவதை குறைப்பதில் தடுக்க முடியவில்லை. எனவே இந்த காரணங்களுக்காக, கடுமையான கோவிட் -19 தொற்றுக்கான சிகிச்சை வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக பிளாஸ்மா சிகிச்சையை ஐசிஎம்ஆர் நீக்கியுள்ளது.

மீண்டும் தொற்று

மீண்டும் தொற்று

பொதுவாக யாராவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உயிரணு அடிப்படையிலான நோய் எதிர்ப்பு சக்தியுடன் அவர்களின் உடலில் ஆன்டிபாடிகள் உருவாகும். ஆன்டிபாடிகள் அளவிடக்கூடியவை மற்றும் காணக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி என்றும் அழைக்கலாம் . இந்த உயிரணு அடிப்படையிலான நோய் எதிர்ப்பு சக்தி கண்ணுக்குத் தெரியாத நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆன்டிபாடிகளைப் போல முக்கியமானது. இந்த நோய் எதிர்ப்பு கூறுகள் கோவிட் -19 உடன் மீண்டும் தொற்று ஏற்படும்போது நோய் மற்றும் தீவிரத்தை தடுக்கிறது.

இந்தியாவிற்கு தேவையா

இந்தியாவிற்கு தேவையா

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையின் படி யாராவது கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்துவிட்டால், அந்த நபரின் நோய் எதிர்ப்பு சக்தி அவரை நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும், அப்படிப்பட்ட நபரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டால், அந்த நபருக்கு தொற்றுக்கு எதிராக இரட்டை பாதுகாப்பு கிடைக்கும். நம் நாட்டில் பூஸ்டர் டோஸின் தேவையை மேற்கத்திய நாடுகளில் எடுக்கப்பட்ட சூழ்நிலை மற்றும் முடிவுகளின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால், நம் நாட்டில் 70% முதல் 80% மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. எனவே ஒட்டுமொத்தமாக நமது மக்களுக்கு உகந்த பாதுகாப்பை வழங்குவதற்கான சரியான நோக்கத்துடன் கூடிய சிறந்த அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் பூஸ்டர் விவகாரத்தில் கவனமான முடிவு எடுக்கப்படும்" இவ்வாறு டாக்டர் என்கே அரோரா கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+