"ஹாட்ரிக்"?.. மத்திய அமைச்சரவையில் மாற்றமா..பிரதமர் தலைமையில் டெல்லியில் கூடுகிறது அமைச்சரவை கூட்டம்
டெல்லி: ஜூலை 3-ம் தேதியான இன்று, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில், மிக மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் எம்பி தேர்தல் நடக்க போகிறது.. எனவே, தேர்தலுக்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
தேர்தல்கள்: இந்நிலையில், கடந்த 23-ந் தேதி, பாட்னாவில் 15 எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தியிருந்தன.. அப்போது, நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக சேர்ந்து சந்திக்கவும் முடிவு செய்திருந்தன.. எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக பாஜகவும், தன்னுடைய கூட்டணி பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
மற்றொருபக்கம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம், நடைபெற உள்ள நிலையில், கூட்டணி பலத்தை அது காட்டுவதாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இதனிடையே. மத்திய அமைச்சரவையும் மாற்றி அமைக்கப்படலாம் என்ற பேச்சும் வலுவாக எழுந்தது.. அப்படி மாற்றம் செய்யப்பட்டால், புதிதாக சேரும் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் பரபரத்தன.. அந்தவகையில், கூட்டணி கட்சிகளை சேர்ந்த பசுபதிகுமார் பராஸ், அனுப்ரியா படேல், ராம்தாஸ் அத்வாலே ஆகிய 3 பேர் மட்டும் மத்திய அமைச்சர்களாக இருக்கும்நிலையில், இதன் விரிவாக்கம் அதிகமாகும்ம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இன்று கூட்டம்: இப்படிப்பட்ட சூழலில், பிரதமர் மோடி தலைமையில், இன்றைய தினம் அதாவது, 3ம் தேதி (திங்கட்கிழமை), மத்திய அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடைபெறவிருக்கிறது.. மோடி ஆட்சியின் 9 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் நடைபெறவுள்ள இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
மத்திய அமைச்சர்கள் குழுவின் கடைசி கூட்டம், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில், செப்டம்பரில், இதே மாநாட்டு மையத்தில் ஜி20 (G20) உச்சிமாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

2024 தேர்தலுக்கு முன்னதாக பாஜக அதன் முக்கிய சித்தாந்த கொள்கைகளை வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த மாதம், 3வது வாரத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது... ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தலும் நடைபெற போகிறது..
ஹாட்ரிக்: பாஜக வலுவுள்ள, பாஜக ஆளும் சில மாநிலங்களிலேயே, சமீபகாலமாக பலத்தை இழந்துவரும் நிலையில், அக்கட்சியின் வியூகம் தீவிரமாகி உள்ளது.. பலவீனமான இடங்களை தேர்ந்தெடுத்து, களப்பணியை அதிகப்படுத்தும் வேலைகளிலும் பாஜக இறங்கி உள்ளது.. அதேபோல, சமீபத்தில் நடந்த தேர்தல்களில், வடமாநிலங்களில் விட்டதையெல்லாம், தென்மாநிலங்களில் பிடித்துவிட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது.. எப்படி பார்த்தாலும், ஹாட்ரிக் வெற்றியை பெற பாஜக இப்போதிருந்தே மும்முரமாகி வருகிறது..
3 மாநில தேர்தல்: ராஜஸ்தான், மத்திய பிரதேசம் சத்தீஸ்கரில் காங்கிரஸ்தான் பாஜகவின் பிரதான போட்டியாளராக உள்ளது. சமீபத்தில், கர்நாடகத்தில் காங்கிரஸிடம் தோல்வியடைந்த நிலையில், இந்த 3 மாநில தேர்தலும் மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாகவே கருதப்படுகிறது. அதனால், 3 மாநில சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசிப்பார் என்றும் தெரிகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், இன்று மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் தலைநகரில் நடக்க உள்ளது, நாட்டு மக்களின் கவனத்தை திருப்பி வருகிறது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications