நான் ஒரு பெருமைமிக்க இந்து! காரணம் இதுதான்! ஜி20 மாநாட்டுக்கு வந்த ரிஷி சுனக் சொன்ன அந்த வார்த்தை!
டெல்லி: ‛‛நான் ஒரு பெருமைமிக்க இந்து. ஏனென்றால் நான் அப்படித்தான் வளர்ந்தேன். அப்படித்தான் இப்போது இருக்கிறேன்'' என டெல்லியில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்த ரிஷி சுனக் கூறினார். மேலும் பிரதமர் மோடி, டெல்லி குறித்த கேள்விகளுக்கும் அவர் சுவாரசியமான பதில்களை அளித்தார்.
டெல்லியில் இன்று ஜி20 மாநாடு தொடங்கி உள்ளது. இன்று, நாளை என 2 நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தான் ஜி20 மாநாட்டில் பங்கேற்க நேற்று டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேட்டியளித்தார். அப்போது அவர் நான் ஒரு பெருமைமிக்க இந்து. இந்தியாவில் இருக்கும் 2 நாட்களில் கோவிலுக்கு செல்ல உள்ளதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக ரிஷி சுனக் கூறியதாவது:
பிரதமர் மோடி மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகக் கூறிய சுனக், ஜி 20 ஐ மகத்தான வெற்றியடையச் செய்வதில் அவருக்கு ஆதரவளிக்க ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார். 'ரக்சா பந்தன்' கொண்டாடுவது குறித்தும் பேசினார்.
அதோடு பிரதமர் மோடி குறித்த கேள்விக்கும், டெல்லி பற்றிய கேள்விக்கும் ரிஷி சுனக் சுவாரசியமான பதில்களை கூறினார். இதுதொடர்பாக ரிஷி சுனக் கூறியதாவது:
நான் ஒரு பெருமைமிக்க இந்து. ஏனென்றால் நான் அப்படித்தான் வளர்ந்தேன். அப்படித்தான் இப்போது இருக்கிறேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு நான் இங்கே இருக்கிறேன். இந்த நேரத்தில் கோவிலுக்கு செல்வேன் என நம்புகிறேன். சமீபத்தில் ரக்சா பந்தன் வந்தது. எனது சகோதரிகள்,உறவினர்களிடம் இருந்து ராக்கி கயிறுகள் வந்தன. அந்த ராக்கி கயிறு என்னிடம் உள்ளது.
ஜென்மாஷ்டமியை கொண்டாட எனக்கு நேரமில்லை. ஆனால் நான் சொன்னது போல் கோவிலுக்கு சென்றால் அதனை கொண்டாட முடியும். இந்த நம்பிக்கை என்பது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக என்னை போன்ற இந்த அழுத்தமான வேலைகள் செய்பவர்களுக்கு இத்தகைய நம்பிக்கை என்பது நெகிழ்ச்சியையும், வலிமையையும் தரும். மேலும் வாழ்க்கையை பற்றிய கண்ணோட்டத்தை இது வழங்குகிறது. இதனால் இந்த நம்பிக்கையை மதிப்பு மிக்கதாக உணர்கிறேன்'' என்றார்.
இதையடுத்து பிரதமர் மோடி குறித்து கேட்டபோது, ‛‛பிரதமர் மோடி மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. அவருக்கு தனிப்பட்ட முறையில் என்னிடம் அன்பு இருக்கிறது. அதோடு நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட விஷயங்களை அடைவதற்கான லட்சிய பயணத்தில் தீவிரமாக உழைக்கிறேன். அதாவது இந்தியா-பிரிட்டன் இடையேயான விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க இருவரும் முயற்சிக்கிறேன்.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பது என்பது இரு நாடுகளுக்கும் சிறப்பானதாக இருக்கும். இதற்காக நாங்கள் உழைக்கிறோம். மேலும் இதுபோன்ற அமைப்புகளில் பிரதமர் மோடியை ஆதரிப்பதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். தற்போதைய ஜி20 மாநாடு என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் இந்தியாவுக்கு இது சிறந்த ஆண்டாக இருக்கும்'' என்றார்.
அதன்பிறகு டெல்லிக்கும் ரிஷி சுனக்கிற்கும் இடையேயான தொடர்பு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரிஷி சுனக், ‛‛நான் இந்தியாவுக்கு திரும்பி வருவதை மிகவும் நன்றாக உணர்கிறேன். அதோடு இங்கு இருப்பதை சிறப்பானதாக கருதுகிறேன். எனது மனைவி அக்சதா பெங்களூரை சேர்ந்தவர் என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் பெங்களூரில் தான் திருமணம் செய்து கொண்டோம். அதன்பிறகு டெல்லியில் இருவரும் ஒன்றாக நிறைய நேரத்தை செலவழித்தோம்.
இதனால் டெல்லியில் எங்களுக்கான பேவரைட் உணவகத்துக்கு செல்ல முயற்சி செய்கிறோம். மேலும் இந்தியா என்பது நான் நேசிக்க கூடிய ஒரு நாடு. ஏனென்றால் எனது குடும்பத்தினர் இங்கு தான் வசிக்கின்றனர். தற்போது நான் பிரதமராக பிரிட்டனை பிரதிநிதித்துவப்படுத்த இங்கு வந்துள்ளதால் இந்தியாவுக்கும், எங்களுக்கும் இடையேயான சில முக்கிய விஷயங்களில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். இந்தியாவுடன் இன்னும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications