'நான் ஒரு வெஜிடேரியன்.. வெங்காயம் சாப்பிட்டதில்ல.. விலையும் தெரியாது’.. மத்திய அமைச்சர் ஷாக் பேச்சு
Recommended Video
டெல்லி: வெங்காய விலை உச்சத்தில் போனது போச்சு அமைச்சர்கள் எல்லாம் வெங்காயமே நாங்க சாப்பிடுறது இல்லை என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி பேசுவது மக்களுக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பொறுப்புள்ள மத்திய அமைச்சர் பதவியில் உள்ளவர்கள் இப்படி பேசலாமா என்று கொந்தளித்து வருகிறார்கள்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் வெங்காய விலை குறித்த கேள்விக்கு, தான் வெங்காயமே சாப்பிடுவது இல்லை என்று பதில் அளித்தார்.

அதிர்ச்சி
இந்த பதிலை கேட்டு எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். ஊடகங்களிலும் , சமூக வலைதளங்களிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு தான் பேசும் பொருளாக மாறிக்கிடக்கிறது.

ரூ.150க்கு விற்பனை
நாட்டில் வெங்காய விலை 150ஐ தாண்டிவிட்ட நிலையில் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது,
|
வெங்காயம்
இது ஒருபுறம் எனில் மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபே தான் வெங்காயம் சாப்பிடுவது இல்லை என பேசியுள்ளார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், மத்திய அமைச்சர் பேசுகையில், நான் ஒரு சுத்த சைவம். நான் இதுவரை வெங்காயமே சாப்பிட்டது இல்லை. எனவே எனக்கு வெங்காயம் விலை சந்தையில் எப்படி விற்கப்படுகிறது என்று மற்றவர்களை போல் எனக்கும் தெரியாது" என்று தெரிவித்துள்ளார். இந்த பேச்சும்தற்போது வைரலாகி வருகிறது.

விலை குறைப்பு
வெங்காய விலையை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி பேசாமல் வெங்காயமே சாப்பிடுவதில்லை என்று அமைச்சர்கள் அடுத்தடுத்து பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications