குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு என்ன சொல்ல போறீங்க? செய்தியாளர் கேள்வி! பேரறிவாளன் உருக்கமான பதில்
டெல்லி: 1991ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்ன சொல்ல போகிறீர்கள் என்ற கேள்விக்கு பேரறிவாளன் பதில் அளித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றின் பேட்டியில் அவர் சில உருக்கமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
பெரும் போராட்டம் மற்றும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் இந்த தீர்மானத்தில் மிக அதிக காலம் எடுத்ததாக கூறி கடுமையாக விமர்சனம் வைத்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. 31 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விடுதலை ஆகியுள்ளார்.
Recommended Video
இதனால் இத்தனை ஆண்டுகளாக ஊடகம் முன் தோன்ற முடியாமல் இருந்த பேரறிவாளன்.. தற்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

பேரறிவாளன் பேட்டி
இந்த நிலையில் என்டிடிவி ஆங்கில ஊடகத்திற்காக ஜெ சாம் டேனியல் ஸ்டாலின் என்ற செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பேரறிவாளன் ஆங்கிலத்தில் பதில் அளித்தார். அதில் உச்ச நீதிமன்றம் உங்களை தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்விக்கு.. இந்த ஒரு உத்தரவுக்காகத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகள் காத்து இருந்தோம். இந்த வழக்கில் மற்ற 6 பேரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஆம் அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பேரறிவாளன் உருக்கம்
இந்த வழக்கில் நீங்கள் ஒரு ராஜீவ் காந்தி கொலையாளி என்ற விமர்சனம் வைக்கப்படுகிறதே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு.. இது கொஞ்சம் டிரிக்கான கேள்வி. அதற்குள் நான் சொல்லவில்லை. அதை பற்றி பேச விரும்பவில்லை. ஆனால் எல்லோருக்கும் தெரியும்.. வாக்குமூலம் தவறாக பதியப்பட்டது என்று. அந்த விவரம் எல்லோருக்கும் தெரிந்த பின் வழக்கு மாறியது. அதுதான் எனக்கு எதிரான ஒரே ஆதாரம். அது வழக்கை மாற்றியது எல்லோருக்கும் தெரியும். இந்த வழக்கில் அப்போது தீர்ப்பு கொடுத்த ஒரு நீதிபதியே நான் இதை பற்றி பேசி இருக்கிறார்.

என்ன சொல்ல போகிறீர்கள்
அந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? அவர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து உள்ளனரே? அவர்களும் உறவுகளை இழந்து உள்ளார்கள்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு.. நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நானும் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தால் நானும் பாதிக்கப்பட்டவன் (victim) என்பதை சொல்கிறேன். நான் என் 32 வருடத்தை இழந்து இருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

இழப்பீடு வேண்டுமா?
அடுத்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு.. நான் இப்போதுதான் வெளியே வந்துள்ளேன். கொஞ்சம் சுவாசித்துக்கொள்கிறேன். மற்ற விஷயங்களை பற்றி பின்பு யோசிப்பேன். திருமணம் பற்றி யோசிக்கலாம் போக போக, என்று கூறினார். இதையடுத்து உங்கள் விடுதலையை தாமதம் ஆக்கிய ஆளுநரிடம் இழப்பீடு கேட்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு.. அப்படி சாரி சாரி அதை பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை, என்று பேரறிவாளன் பதில் அளித்தார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications