"இந்தியா"கூட்டணி வலுவாக இருந்தால் இதுதான் ரிசல்ட்..பாஜகவுக்கு பயங்கர அடி கொடுத்த லடாக் 'தேர்தல்'!
டெல்லி: பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான "இந்தியா" கூட்டணி பி டீம், சி டீம் என செயல்பட்டு அடித்து கொள்ளாமல் நிலைத்து வலிமையாக நின்றால் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை பட்டவர்த்தமான சொல்லி நிற்கிறது லடாக் தேர்தல் முடிவுகள்.
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநில வரலாற்றில் அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாத நாள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மத்திய பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டு பேரதிர்ச்சியை கொடுத்த நாள். அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்ற ஒரு மாநிலமே 2 கூறாகப் பிரிக்கப்பட்டு சட்டசபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் என்கிற ஒரு யூனியன் பிரதேசமாக சட்டசபை இல்லாத லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

அரசியல் நடவடிக்கைகள் முடக்கம்: அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த அரசியல் நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. அம்மாநிலத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் பாரபட்சம் பார்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஓராண்டுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தேர்தல் எப்போதாம்?: 5 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலை மத்திய அரசு நடத்தவில்லை. அப்படியானால் சட்டசபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்ற அறிவிப்பு என்னதான் ஆனது என்ற கேள்விக்கும் பதிலில்லை. விடுதலை இந்திய வரலாற்று இப்படியான வினோதங்களை இப்போது காண்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்.
லடாக் தேர்தல்: இப்பின்னணியில் லடாக் யூனியன் பிரதேசத்தின் தன்னாட்சி கவுன்சிலின் 5-வது தேர்தல் நடத்தப்பட்டது. அதாவது 370-வது பிரிவு நீக்கத்துக்குப் பின்னர் அப்பகுதியில் நடத்தப்படுகிற தேர்தல். ஆகையால் இத்தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை அப்பகுதி மக்கள் ஏற்கவில்லை. முழுமையான மாநில அந்தஸ்து என்பதுதான் லடாக், கார்கில் மக்களின் கோரிக்கை. இதற்காக கார்கில் ஜனநாயகக் கூட்டணி என்ற கட்சியை லடாக் பிராந்திய கட்சிகள் உருவாக்கி இருந்தன.
லடாக் தன்னாட்சி கவுன்சில் தேர்தல்: லடாக் தன்னாட்சி கவுன்சில் தேர்தலில் 'இந்தியா' கூட்டணியின் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, இதன் ஆதரவு பெற்ற கார்கில் ஜனநாயகக் கூட்டணி மற்றும் பாஜக ஆகியவை களம் கண்டன. மொத்தம் 26 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 77.61% வாக்குகள் பதிவாகின.
அடித்து விளையாடிய "இந்தியா": லடாக் தன்னாட்சி கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சி 12 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் வென்றுள்ளன. பாஜக 2 இடங்களில்தான் வென்றுள்ளது. பாஜக வென்ற 2 இடங்களில் ஒன்றில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி தனித்தனியே போட்டியிட்டு வேட்பாளர்களை நிறுத்தியது. ஒருவேளை இந்த இடத்திலும் 'இந்தியா' கூட்டணியாக பொதுவேட்பாளரை நிறுத்தியிருந்தால் பாஜகவுக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்திருக்கும் என்கிற பரிதாப நிலை ஏற்பட்டிருக்கும்.
என்ன முடிவுகள்?: லடாக் தன்னாட்சி கவுன்சில் தேர்தல் முடிவுகளானது 2 விஷயங்களைத் தீர்க்கமாக சொல்கிறது. ஒன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மத்திய பாஜக அரசு பிரித்து கூறு போட்டதை லடாக், கார்கில் மக்கள் நிராகரித்துவிட்டனர். இரண்டாவது, 28 கட்சிகளைக் கொண்ட "இந்தியா" கூட்டணி பாஜகவை எதிர்த்து எந்த தேர்தலாக இருந்தாலும் "பொதுவேட்பாளர்" ஒருவரை நிறுத்தினால் வெற்றி நிச்சயம்; பாஜகவுக்கு தோல்வி உறுதி என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி இருக்கிறது. இதனையே மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் லோக்சபா தேர்தலில் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
என்ன செய்யும் "இந்தியா" கூட்டணி?: "இந்தியா" கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், மத்தியில் பாஜகவின் ஆட்சி மீண்டும் அமைவதைத் தடுக்க பாஜகவுக்கு எதிராக பொதுவேட்பாளர்களை நிறுத்துவதா? அல்லது மாநிலங்களில் கட்சிகளிடையேயான ஈகோவுக்காக "இந்தியா" கூட்டணிக்குள்ளேயே அடித்துக் கொள்வதா? என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தை லடாக் தன்னாட்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாகவும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications