சீனா, பாகிஸ்தானுக்கு வசமான செக்.. இந்தியா களமிறக்கும் உளவு ஜாம்பவான்.. ரெடியாகும் I-STAR!
டெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ரூ.10,000 கோடி மதிப்பிலான உளவு விமானத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், போயிங் மற்றும் பாம்பார்டியர் போன்ற வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மூன்று விமானங்களை டெண்டர் மூலம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் சொந்தமாக உள்நாட்டிலேயே உளவு விமானங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
ரூ.10,000 கோடி மதிப்பிலான உளவு விமானத் திட்டம்
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய விமானப்படைக்காக எதிரிகளின் தரை இலக்குகளை துல்லியமாகத் தாக்க உதவும் அதிநவீன உளவு விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஜூன் மாதத்தின் நான்காவது வாரத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உளவு விமானங்கள் புலனாய்வு, கண்காணிப்பு மற்றும் இலக்குகளை கண்டறிதல் போன்ற பணிகளைச் செய்யும் திறன் கொண்டவை. இதன் மூலம் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தேவையான வான்வழி கண்காணிப்பு கிடைக்கும். மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகளைப் போல இந்தியாவும் உளவு விமானங்களை உருவாக்கும் திறன் கொண்ட நாடாக மாறும். இந்தத் திட்டத்தின் கீழ் I-STAR எனப்படும் உளவு விமானங்களை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
I-STAR அமைப்பின் சிறப்பம்சங்கள்
I-STAR அமைப்பு நாட்டின் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்தும். எதிரி நாடுகளை உளவு செய்யவும், உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யவும் இது உதவிகரமாக இருக்கும். பலதரப்பட்ட கண்காணிப்பு திறன்களைக் கொண்ட இந்த அமைப்பு, இந்திய படைகளை பாதுகாக்கவும், வெளிநாட்டு படைகளை கண்காணிக்கவும் உதவும்.
I-STAR அமைப்புகள் அதிக உயரத்தில் இருந்து செயல்படும் திறன் கொண்டவையாக இருக்கும். மேலும், இது உளவுத்துறை செயலாக்கம், புலனாய்வு, கண்காணிப்பு மற்றும் இலக்குகளை கண்டறிதல், தீவிரவாத அமைப்புகளை நோட்டமிடுதல் போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும். இந்த I-STAR விமானம் வான்வழி மற்றும் தரைவழிப் பிரிவுகளை உள்ளடக்கிய அமைப்பாக இருக்கும்.
இந்த வான்வழி அமைப்புகள் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். DRDO-வின் வான்வழி அமைப்பு மையமான CABS இவற்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இதற்கான சோதனைகள் முதல் கட்டமாக நடந்து வருகின்றன.
ரஷ்யா விற்கும் ஏவுகணை
இது போக இந்தியாவிடம் அதிநவீன R-37M ஏவுகணைகளை விற்பனை செய்ய ரஷ்யாவும் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவுடன் ரஷ்யா ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
R-37M ஏவுகணைகள் ஹைப்பர் சோனிக் வேகத்தில் நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது இது. இது வானத்தில் விமானம் மூலம் பூமியில் உள்ள இலக்குகளை தாக்க கூடியது. இது 300-400 கிலோ மீட்டர் தூரத்திற்கு எளிதாக சென்று தாக்கும் திறன் கொண்டது. மேக் 6 வேகத்தில் செல்ல கூடியது. அதாவது 1 மணிக்கு 7,400 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது.
இதனால் போர் சமயத்தில்.. வானத்தில் இருந்து R-37M ஏவுப்படும் பட்சத்தில், அந்த ஏவுகணைகளை தடுப்பது மிகவும் கடினம். அதிலும் எதிரி நாட்டு போர் விமானங்களை குறி வைத்தால், அந்த போர் விமானங்கள் இதில் இருந்து தப்பித்து செல்ல முடியாத சூழல் ஏற்படும். விமானப்படையில் பாகிஸ்தானை விட கூடுதல் பலம் பெற இந்தியா தீவிரமாக முயன்று வரும் நிலையில்தான் இந்த முடிவை ரஷ்யா எடுத்துள்ளது.
ரஷ்யாவின் விம்பல் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட R-37M ஏவுகணை வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் (AWACS), டேங்கர் விமானங்கள், எதிரி நாட்டு தீவிரவாத மையங்கள், தளவாடங்கள் போன்ற உயர் மதிப்புள்ள இலக்குகளை எளிதாக தாக்கி அழிக்க முடியும்.
இப்படிப்பட்ட அதிநவீன R-37M ஏவுகணைகளை இந்தியாவிடம் விற்பனை செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவுடன் ஆலோசனைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இது 510 கிலோ எடை கொண்டது. அதில் கூடுதலாக வெடிபொருட்களை சேர்க்கும் பட்சத்தில் அதன் எடை 60 கிலோ மேலும் உயரும். ரஷ்யாவின் Su-30, Su-35, Su-57, MiG-31BM, 272 Su-30MKI, MiG-35, போன்ற போர் விமானங்களில் பயன்படுத்த முடியும். ரஷ்யாவின் பல்வேறு மிக், சுகோய் விமானங்களை இந்தியா பயன்படுத்துகிறது. இந்த நிலையில்தான் இந்த ஏவுகணைகளை விற்பனை செய்ய ரஷ்யா தீவிரமாக முயன்று வருகிறது.












Click it and Unblock the Notifications