இந்திரா காந்தியை போல் என்னையும் கொன்றுவிடுவார்கள்.. பகீர் கிளப்பும் கெஜ்ரிவால்!
டெல்லி: இந்திரா காந்தியை போல் என் பாதுகாவலர்களே என்னையும் சுட்டுக்கொன்று விடுவார்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 11ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் பஞ்சாப், மேற்குவங்கம் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆம் ஆத்மி பிரச்சாரம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் தேர்தல் நடைபெற்றது. இதற்காக பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. கடந்த 4ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மோட்டி நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கன்னத்தில் அறை
பிரச்சாரத்தின் போது இளைஞர் ஒருவர் அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலை செய்ய சதி
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

இந்திராவை போல்
இந்திரா காந்தியை போல் எனது தனிப்பட்ட பாதுகாவலர்களாளேயே நான் சுட்டுக்கொல்லப்படலாம். பாஜக ஒரு நாள் என் வாழ்க்கையை முடித்து என்னை தீர்த்துக்கட்டிவிடும். எனது பாதுகாவலர்கள் மோடிக்குத்தான் வாக்களித்துள்ளனர். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

போலீஸ் பாதுகாப்பு
ஆனால் முதல்வருக்கான பாதுகாப்பில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு அவர்கள் பணியில் இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைத்து அரசியல் கட்சிகளின் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பு
பாஜக பாதுகாவலர்கள் தன்னையும் கொன்று விடுவார்கள், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications