சீனாவை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்திய விமானப்படை உள்ளதா? IAF தளபதி சொன்ன ஷாக் உண்மை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுக்கு இப்போதைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது சீனாதான். ஒருவேளை நமக்கும், சீனாவுக்கும் சண்டை வருகிறது எனில்.. சீனாவை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்திய விமானப்படை ரெடியாக இருக்கிறதா? என்கிற கேள்விக்கு இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் கூறியிருக்கும் தகவல்கள் விவாதங்களை கிளப்பியிருக்கின்றன.

ANI தேசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், "இப்போது போர் சூழலும் இல்லை, அமைதி சூழலும் இல்லை. இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் இந்திய விமானப்படை ரெடியாகத்தான் இருக்கிறது.

IAF

ஆனால், சீனாவை தடுத்து நிறுத்தும் அளவுக்கு எண்ணிக்கையும், தொழில்நுட்பமும் நம்மிடம் இருக்கிறதா? என்று கேட்டால்.. ஓகே நிலைமைதான் என்று பதில் சொல்ல முடியும். இந்திய விமானப்படையில் 42.5 படைப்பிரிவுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு படைப்பிரிவுக்கு 16-18 விமானங்கள் என மொத்தம் சுமார் 750 போர் விமானங்கள் நமக்கு தேவை. இருப்பதோ 29 படைப்பிரிவுகள் மட்டுமே!

சீனாவும், பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ள 42.5 படைப்பிரிவுகள் தேவை. எனவேதான் இந்த எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

போர் விமானங்களின் எண்ணிக்கையும், அது ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனையும் உடனடியாக அதிகரிக்க வேண்டும். குறிப்பாக உள்நாட்டு தயாரிப்புகளை உடனே விமானப்படையில் இணைக்க வேண்டும். போருக்கு எப்போதும் தயாரக இருக்க, நம்மிடம் இருக்கும் பழைய விமானங்களை நவீனப்படுத்த வேண்டும். SU-30-ஐ நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோக MiG-21, MiG-23, MiG-27 ஆகிய பழைய விமானங்களை நாம் விடுவித்திருக்கிறோம்.

இப்படி விடுவிக்கப்பட்ட பழைய விமானங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அதே வேகத்தில் புதிய விமானங்கள் இணைக்கப்படவில்லை. உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் விமானங்களை, படைகளை இணைப்பதில் தாமதம் இருக்கிறது. இது தவிர வெளிநாட்டிலிருந்து விமானங்களை வாங்குவதிலும் சில தாமதங்கள் இருக்கின்றன. வெளிநாட்டு விமானங்களை வாங்கும் விஷயத்தை பொறுத்தவரை.. ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பில் 114 ரஃபேல் விமானங்களை வாங்கும் திட்டத்தை இந்திய விமானப்படை விரைவுப்படுத்தி வருகிறது" என்று கூறியிருக்கிறார்.

மறுபுறம் அப்படியே சீனாவை பார்த்தால்.. அவர்களிடம் சுமார் 2,000க்கும் அதிகமான நவீன விமானங்கள் இருக்கின்றன. இதுபோதாது என்று.. பாகிஸ்தானும் சீனாவுடன் சேர்ந்து தனது விமானப்படையை நவீனப்படுத்தி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+