அபிநந்தனை கெளரவப்படுத்தும் ஆண்ட்ராய்ட் வீடியோ கேம்.. விமானப்படை அசத்தல்
டெல்லி: இந்திய விமானப்படை ஹீரோ அபிநந்தனை பெருமைப்படுத்தும் வகையில் இந்திய விமானப்படை புதிய மொபைல் கேம் ஒன்றை வெளியிட உள்ளது. இந்த கேமை வரும் 31 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்ட், மற்றும் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கடந்த ஏப்ரல் மாதம் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டி அடித்தது. அப்போது, பாகிஸ்தான் வசம் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் சிக்கினார். பின்னர், இரண்டு நாட்களில் பாகிஸ்தான் அரசு அவரை விடுவித்தது. இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு இந்திய மக்கள் ஏகோபித்த வரவேற்பும் ஆதரவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்திய விமானப்படையின் செயல்பாடுகளை காட்டும் வகையில் மொபைல் கேம் ஒன்றை இந்திய விமானப்படை வெளியிட உள்ளது. இந்த மொபைல் கேமில் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய விமானப்படையின் ஹீரோவாக புகழப்பட்ட அபிநந்தன் ஹீரோவாக உள்ளார். இந்த கேம் டீசர் இந்திய விமானப்படையின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ஒரு நிமிடம் 41வினாடிகள் ஓடுகிறது. இந்த டீசரில் ரஷ்ய தயாரிப்பு விமானமான மிக் 21 விமானத்துடன் ஒரு போர் விமானி சண்டையிடுகிற காட்சி காணப்படுகிறது.
இந்த மொபைல் கேமில் வரும் விமானியும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானும் ஒரே மாதிரி இருக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேம் குறித்து கூறிய இந்திய விமானப்படை அதிகாரிகள்; இந்த விளையாட்டில் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் குண்டு வீச்சு விமானங்கள் ஆகியவை உள்ளன. இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் இந்த வாகனங்களை திரை கட்டுப்பாடுகளில் விசுவலாகவும் பார்க்கலாம், மேலும், இந்த விளையாட்டு, விமானங்களையும் எதிரிகளின் விமானங்களையும் சுட்டு வீழ்த்தவும் செய்யலாம்.
அதோடு நிஜமான விமானப்படை விமானிகள், விமானங்கள் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது எரிபொருள் நிரப்புதல் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. IAF GAME என்றழைக்கப்படும் இந்த விளையாட்டை வரும் 31 ம் தேதி முதல் ஆண்ட்ராய்ட், மற்றும் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இப்போது வெளிவரும் இந்த விளையாட்டு ஒருவர் விளையாடும் வகையிலும் இதற்கு அடுத்து வரவுள்ள பதிப்பு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து விளையாடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications