அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான் சப்போர்ட் பண்ன மாட்டேன்.. டக்கென சொன்ன ஒவைசி.. எதுக்காகவாம் தெரியுமா?
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளை சந்தித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு தன்னுடைய ஆதரவு கிடையாது என்று ஐதராபாத் எம்.பி ஒவைசி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். டெல்லியை பொறுத்தவரை யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் முட்டல் மோதல் நீடிக்கிறது.

டெல்லியில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதனால், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையேயும் அதிகாரப்பகிர்வு, ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த சூழலில் தான், கடந்த சில தினங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு, இந்த கருத்து மோதல் உச்சத்தை அடைய வழி வகுத்தது. அதாவது, டெல்லியில் அதிகாரிகள் மாற்றம், நியமனம் போன்றவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டெல்லி அரசுக்கும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.
இது தொடர்பாக நீதிமன்றத்தின் கதவு தட்டப்பட்ட நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு தான் அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்தது. ஆனால், அதற்கு மறுநாளே உச்ச நீதிமன்ற உத்தரவை நீர்த்து போக செய்யும் விதமாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்துள்ளது.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வரும் கெஜ்ரிவால் மாநிலங்களவையில் அவசர சட்டம் வரும் போது அதற்கான ஆதரவை திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோரை சந்தித்து மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினையும் கெஜ்ரிவால் இன்று சந்திக்க இருக்கிறார். இப்படி மத்திய அரசுக்கு எதிராக தீவிரமாக எதிர்கட்சிகளின் தலைவர்களை கெஜ்ரிவால் சந்தித்து வரும் நிலையில், மத்திய அரசை பல விவகாரங்களில் மிக கடுமையாக எதிர்க்கும் ஐதராபத் எம்.பியும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான ஒவைசி, கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுக்க மாட்டேன் என அறிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று பார்க்க வைத்துள்ளது.
இது தொடர்பாக ஒவைசி கூறும் போது, "ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தீவிர இந்துத்வாவை பின்பற்றுகிறார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் போது கெஜ்ரிவால் ஏன் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தார். தற்போது ஏன் கதறுகிறார்? நான் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுக்க போவது இல்லை. ஏனெனில் அவர் இந்துத்வாவை மென்மையாக ஆதரிக்கிறார் என்றல்ல... மிக தீவிரமாக அவர் இந்துத்வாவை ஆதரிக்கிறார்" என்றார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications