சூ சின் டென் டூல் கா, வீ ராத் கோ லீ.. இதென்ன சீன உணவுகளா.. டிரம்பை கலாய்த்த கிரிக்கெட் டீம்
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் சச்சின், கோஹ்லியை உச்சரித்த விதத்தை கிரிக்கெட் வீரர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இரு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கினார். பின்னர் சபர்மதி ஆசிரமத்திற்கு மோடி அழைத்து சென்றார்.
அங்கிருந்து சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசினார்.

சிறந்த வீரர்கள்
அவர் பேசுகையில் பாலிவுட் திரைப்படங்கள் குறித்தும் கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் பேசினார். பாலிவுட்டில் வெளியாகும் படங்களை உலக மக்கள் அனைவரும் பார்வையிட்டு ரசிக்கின்றனர். சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி போன்ற சிறந்த வீரர்கள் இந்தியாவில் உள்ளனர் என்றார்.

சக வீரர்கள்
அப்போது சச்சின் டெண்டுல்கரை சூ சின் டென் டூல் கா என உச்சரித்தார். அது போல் விராத் கோஹ்லி என்ற பெயரை வீ ராத் கோ லீ என உத்தரவிட்டார். அது போல் விவேகானந்தரை விவேகானானான் என உச்சரித்தார். கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை டிரம்ப் உச்சரித்து சக வீரர்கள் டிரோல் செய்து வருகின்றனர்.
|
நன்கு பேச அறிவுரை
இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தன் ட்விட்டர் பக்கத்தில் பிரிட்டன் தொலைக்காட்சி தொகுப்பாளர் பியர்ஸ் மார்கனை டேக் செய்து பெயர்களை உச்சரிப்பது குறித்து நன்கு அறிந்து கொண்டு பேசச் சொல்லுங்கள் என கூறியுள்ளார்.
|
கிரிக்கெட் ட்வீட்
அது போல் ஐஸ்லாந்து கிரிக்கெட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சூ சின் டென் டூல் கா, வீ ராத் கோ லீ ஆகியவை இந்தியாவில் இருக்கும் மிகவும் புகழ்வாய்ந்த சீன உணவுகளின் பெயர்களா. இவற்றையெல்லாம் சரியாக டிரம்பிற்கு உச்சரிக்க தெரிந்துள்ளதே என கிண்டல் அடித்துள்ளது.

ஐசிசி கிண்டல்
அது போல் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் எப்படி இருக்கிறீர்கள் சூச்சின் என கிண்டல் செய்துள்ளார். அது போல் ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் எப்படி உச்சரிப்பது என கேள்வி எழுப்பி நான்கைந்து ஆப்ஷன்களையும் கொடுத்துள்ளது. அதில் சச், சுச், சாட்ச், சூச், சுட்ச் என குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளது.
-
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
ஐபிஎல் முடிந்தது.. அடுத்த வேலையை பாருங்க.. உதய் கோட்டக் ட்வீட் கொடுத்த ஷாக் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications