டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் 100% பேருக்கும் ரேபிட் ஆன்டிஜென் சோதனை அவசியம்.. ஐசிஎம்ஆர்

Google Oneindia Tamil News

டெல்லி: நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆன்டிஜென் விரைவு சோதனை கட்டாயம் என புதிய வழிமுறைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 40 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு விட்டார்கள்.

ICMRs new advisory for states released, RAT kits mandatory

இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தற்போது புதிய அறிவுறுத்தல்களை பரிந்துரைத்துள்ளது. அதில் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அனைவருக்கும் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் எடுக்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக எந்த நகரங்களில் நோயின் தாக்கம் மோசமாக இருக்கிறதோ அங்குள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இதை செய்ய வேண்டும்.

ஒருவேளை இதில் நெகட்டிவ் என வந்துவிட்டால் அவர்களுக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட வேண்டும். கொரோனா சோதனை இல்லை என்பதை காரணம் காட்டி பிரசவம் உள்ளிட்ட எந்த அவசர கால நடைமுறைகளும் தாமதப்படுத்தக் கூடாது. கொரோனா சோதனை வசதி இல்லாத நிலையில் கர்ப்பிணிகளுக்கு பரிந்துரைக்கக் கூடாது.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் 2-ம் இடத்தை நோக்கி இந்தியா- பிரேசிலை நெருங்கியது கொரோனா பாதிப்பில் உலக அளவில் 2-ம் இடத்தை நோக்கி இந்தியா- பிரேசிலை நெருங்கியது

Recommended Video

    Corona தடுப்பூசியில் India தான் உலகத்திறகே உதவும் - Bill Gates நம்பிக்கை

    கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் ஆன்டிஜென் சோதனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நோய் தொற்று இல்லாத பகுதிகளில் பிசிஆர் சோதனைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். கொரோனா சோதனை செய்ய விரும்பும் அனைவரும் செய்து கொள்ளலாம். இதுகுறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

    English summary
    Those who lives in Containment zones should be tested using Rapid Antigen Testing especially in the places where the virus affected aggressively.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X