Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிமோனியா டூ டைபாய்டு வரை.. இப்போதெல்லாம் பல நோய்கள் மருந்துகளுக்கு கட்டுப்படுவதே இல்லை! காரணம் இதோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டில் பல நோய் கிருமிகள் ஆண்டிபாடிகளுக்கு பலன் தருவதில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது. பல வகையான நோய்ப் பாதிப்புகளின் எதிர்ப்பு செயல்திறன் காலப்போக்கில் குறைந்து வருவதாகவும் ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள ரிப்போர்ட் பலருக்கும் அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.

கொரோனா, குரங்கு அம்மை போலப் புதிது புதிதாக வெடிக்கும் நோய்கள் நமக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இது போன்ற புதிய நோய்கள் ஒரு பக்கம் என்றால் ஏற்கனவே இருக்கும் நோய்களும் திடீரென பரவிப் பல வித பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

health icmr doctor

இதற்கிடையே ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுக்க அதிகரிக்கும் ஆண்டிபயாடி எதிர்ப்பு நோய்கள் குறித்த பிரச்சினைகள் குறித்து எச்சரித்துள்ளனர்.

பாக்டீரியாக்கள்: சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றுகள், ரத்த தொற்றுகள், நிமோனியா மற்றும் டைபாய்டு போன்றவற்றை ஏற்படுத்தும் சில பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக்ஸ்களுக்கு பலன் தருவதில்லை என்றும் இதனால் இந்த நோய்களுக்கு சிகிச்சையளிப்பது கடினமாகி வருவதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நிமோனியா, செப்சிஸ், சுவாச தொற்றுகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஆன்டிபயாடிக்ஸ்களுக்கு எப்படி பலன் தருகிறது என்பதைக் கண்காணிக்கும் ஐசிஎம்ஆரின் ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு கண்காணிப்பு நெட்வொர்க் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு நாடு முழுக்க உள்ள மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட டேட்டாவை வைத்து இந்த ரிபோர்ட் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க 99,492 பேரிடம் மாதிரிகளைச் சேகரித்து இந்த ரிப்போர்ட்டை உருவாக்கியுள்ளனர்.

வெறும் 20% தான் பலன் தருகிறது: அதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. ஈ.கோலை பாதிப்பால் ஐசியுவில் மற்றும் வெளி நோயாளி பிரிவில் சிகிச்சை பெறுவோருக்கு அளிக்கப்படும் செஃபோடாக்சைம், செஃப்டாசிடைம், சிப்ரோஃப்ளோக்சசின் மற்றும் லெவோஃப்ளோக்சசின் போன்ற ஆன்டிபாடிக்கள் வெறும் 20%க்கு கீழ் மட்டுமே பயன் தருகிறதாம்..

அதேபோல் க்ளெப்சியெல்லா நிமோனியா மற்றும் சூடோமோனாஸ் ஏருகினோசா உள்ளிட்ட பாதிப்புகளும் ஆன்டிபடிக்களுக்கு பலன் தருவதில்லையாம். பல மாத்திரைகளின் திறன் என்பது காலப்போக்கில் குறைந்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, பைபராசிலின்- டாசோபாக்டம் என்ற ஆன்ட்டிபாடியின் செயல்திறன் கடந்த 2017இல் 56.8%ஆக இருந்தது. ஆனால், 2023இல் அது 42.4%ஆகக் குறைந்துள்ளது.

தலைவலி: இவை மட்டுமின்றி பொதுவாகப் பயன்படுத்தப்படும் அமிகாசின் (amikacin) மற்றும் மெரோபெனெம் (meropenem) போன்ற ஆன்டிபாடிகளும் கூட நோய்களுக்குப் பெரிதாகப் பலன் தருவதில்லையாம். சால்மோனெல்லா டைஃபி போன்ற இரைப்பை குடல் அழற்சியை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் ஆன்டிபாடிகளுக்கு 95% வரை பலன் தருவதில்லையாம். இதனால், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் போது நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதே பெரும் தலைவலியாக மாறியுள்ளதாம்.

என்ன காரணம்: தேவையற்ற மற்றும் அதீத ஆன்டிபயாடிக்ஸ் பயன்பாடே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தேவையின்றி ஆன்டிபயாடிக்ஸ்களை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அது ஏன் முக்கியமானது என்பதை உணர்த்துவதாக இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன. மேலும், தேவையற்ற ஆண்டிபாடிகள் பயன்பாட்டைத் தடுக்கவும் தீவிரமான கட்டுப்பாடுகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே நவீன மருத்துவர்கள் ஆன்டிபயாடிக்ஸ் தராமலே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி நோய்களை கட்டுப்படுத்தும் வைத்திய முறையை கையாளத் தொடங்கியுள்ளனர். பல பெருநகரங்களில் குழந்தைகளுக்கு ஆன்டிபயாடிக்ஸ் தருவதை நவீன மருத்துவர்கள் நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காய்ச்சல் கூடுதலாக சில நாட்கள் தொடர்ந்தாலும் பிரச்சினையில்லை, ஆனால் ஆன்டிபயாடிக்ஸ் எடுப்பது பிற்காலத்தில், தேவைப்படும்போது ஆன்டிபயாடிக்ஸை பயன்படுத்தினாலும் பலன் தராத நிலைக்கு கொண்டுபோகக்கூடும் என்பது நவீன மருத்துவர்கள் கருத்தாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+