இன்று தேர்தல் நடக்கட்டும்.. மோடி “கன்ஃபார்மா” பிரதமர் ஆவார்! பட் காங்கிரஸும் டுவிஸ்ட் வைக்குதே?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களவைத் தேர்தலை இப்போது நடத்தினாலும் பாஜகவே வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்து உள்ள இந்தியா டுடே கருத்துக்கணிப்பு காங்கிரஸ் நிலை குறித்தும் தெரிவித்து உள்ளது.

2024 மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் நிறுவனம் இணைத்து நடத்திய மூட் ஆஃப் நேஷன் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதில் பாஜக, மோடிக்கு இருக்கும் ஆதரவு, இந்தியா கூட்டணி தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

If Election conducted today Modi will be a prime minister - India Today survey

அதன்படி தற்போது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றாலும் பாஜகவே அதிக தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ஜனவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்தியா டுடே நிறுவனம் கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களிலும், இதர கட்சிகள் 188 தொகுதிகளிலும், காங்கிரஸ் 52 இடங்களிலும் வெற்றிபெற்றன.

ஜனவரி 2020ல் இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் பாஜக 271 இடங்களிலும், இதர கட்சிகள் 212 தொகுதிகளிலும், காங்கிரஸ் 60 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2020ல் இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் பாஜக 283 இடங்களிலும், இதர கட்சிகள் 211 தொகுதிகளிலும், காங்கிரஸ் 49 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 2021 கருத்துக்கணிப்பில் பாஜக 291 இடங்களிலும், இதர கட்சிகள் 201 தொகுதிகளிலும், காங்கிரஸ் 51 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்டு 2021 கருத்துக்கணிப்பில் பாஜக 269 இடங்களிலும், இதர கட்சிகள் 215 தொகுதிகளிலும், காங்கிரஸ் 59 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 2022 கருத்துக்கணிப்பில் பாஜக 271 இடங்களிலும், இதர கட்சிகள் 210 தொகுதிகளிலும், காங்கிரஸ் 62 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்டு 2022 கருத்துக்கணிப்பில் பாஜக 283 இடங்களிலும், இதர கட்சிகள் 200 தொகுதிகளிலும், காங்கிரஸ் 60 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 2023 கருத்துக்கணிப்பில் பாஜக 284 இடங்களிலும், இதர கட்சிகள் 191 தொகுதிகளிலும், காங்கிரஸ் 68 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்டு 2023 கருத்துக்கணிப்பில் பாஜக 287 இடங்களிலும், இதர கட்சிகள் 182 தொகுதிகளிலும், காங்கிரஸ் 74 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+