மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால்.. நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் இல்லை? பதவி யாருக்காம் தெரியுமா?
டெல்லி: நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் பாஜக வென்று பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றால் மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்படாது என கூறப்படுகிறது. மாறாக தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் புதிய நிதி அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நிர்மலா சீதாராமனை கைவிடுவதன் பின்னணியில் முக்கிய 2 காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2014, 2019 ஆகிய லோக்சபா தேர்தல்களில் பாஜக வென்று மத்தியில் ஆட்சியை பிடித்தது. இந்த 2 தேர்தல் வெற்றியை தொடர்ந் பிரதமராக நரேந்திர மோடியே செயல்பட்டு வருகிறார். தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட இந்த தேர்தலில் 5 கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துவிட்டது.

இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டும் நடைபெற உள்ளது. அதன்படி நாளை மறுநாள் 6வது கட்ட தேர்தலும், அதன்பிறகு ஜுன் 1ல் 7 வது கட்ட லோக்சபா தேர்தலும் நடைபெற உள்ளது. அதோடு லோக்சபா தேர்தல் முழுவதுமாக முடிவுக்கு வருகிறது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் ஜுன் 4ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது நடைபெறும் லோக்சபா தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்பார். இந்த வேளையில் தற்போது நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் அந்த பொறுப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது. மாறாக நிர்மலா சீதாராமனுக்கு பதிலாக தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மத்திய நிதி அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் நிர்மலா சீதாராமனிடம் இருந்து மத்திய நிதி அமைச்சர் பொறுப்பை பறிக்க முக்கியமாக 2 காரணங்கள் கூறப்படுகிறது. இதில் முதல் காரணம் என்னவென்றால் அவரது செயல்பாடு தான். அதாவது மத்தியில் 2014ல் பாஜக ஆட்சி அமைந்த பிறகு நிதி அமைச்சராக அருண் ஜெட்லி இருந்தார். கடந்த 2018ல் அவர் மறைவை தொடர்ந்து 2019ல் பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சரானார். ஒரு இடைக்கால பட்ஜெட் , 5 முழுபட்ஜெட் என தொடர்ந்து 6 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். ஆனால் சமீபகாலமாக அவரது செயல்பாடு என்பது பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்களை ஈர்க்கவில்லை என கூறப்படுகிறது.
அதாவது மீடியாக்களை கையாண்ட விதம் மற்றும் அவரது கல்வி குறித்த விமர்சனங்களை எதிர்கொண்டது உள்ளிட்டவற்றில் நிர்மலா சீதாராமனின் செயல்பாடு என்பது பாராட்டும் படியாக இல்லை என பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் பெரிய தலைவர்கள் நினைப்பதாக கூறப்படுகிறது. இது நிர்மலா சீதாராமனுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும் தற்போதைய லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும் கூட நிர்மலா சீதாராமன் தீவிர பிரசாரம் செய்யவில்லை. சில இடங்களில் மட்டுமே அவர் பிரசாரம் மேற்கொண்டார். தீவிர பிரசாரத்தில் அவர் ஈடுபடாத நிலையில் அவர் தற்போதே பாஜக மேலிடத்தால் ஓரம்கட்டப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் 2வது காரணம் என்னவென்றால் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தான். இவர் தொடர்ந்து பாஜக மற்றும் பிரதமர் மோடியை எதிர்த்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் அவர் பாஜகவின் கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சிக்கின்றனர். நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை குறித்த தரவுகளை காட்டி காட்டமான வார்த்தைகளால் சாடி வருகிறார். இதனை நிர்மலா சீதாராமனால் தடுக்க முடியவில்லை. இது நிர்மலா சீதாராமனை மாற்ற விரும்பும் பாஜக தலைவர்களின் 2வது காரணமாகும்.
ஒருவேளை இது நடக்கும் பட்சத்தில் அதாவது நிர்மலா சீதாராமனிடம் இருந்து நிதி அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டால் அவர் வேறு துறை அமைச்சராக நியமிக்கபட வாய்ப்புள்ளது. ஏனென்றால் பாஜகவில் நாடு முழுவதும் அறியப்படும் பெண் தலைவர்களில் ஒருவராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவர் முதலில் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இதன்மூலம் பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் பெண் என் பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றிருந்தார்.
அதன்பிறகு அருண் ஜெட்லி மறைவை தொடர்ந்து 2019ல் மோடி 2.0 அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் முழுநேர நிதி அமைச்சராக்கப்பட்டார். அதோடு முழுநேர மத்திய பெண் நிதி அமைச்சர் என்ற பெயரை பெற்றார். இதனால் நிர்மலா சீதாராமனிடம் இருந்து நிதி அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டால் அவர் வேறு துறை அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனாலும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அதையும் நாம் உறுதியாக சொல்லிவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications