ஒரு நாளைக்கு 17 மணி நேரம் உழைக்கிறார் மோடி.. ஒரு நாள் கூட லீவு எடுத்தது இல்லை.. உருகிய அமித்ஷா
டெல்லி: சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து ஒரு நாள் கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் 24 மணி நேரத்தில் 17 மணி நேரம் உழைக்கும் ஒரே பிரதமர் என்றால் அது நரேந்திர மோடி தான் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு வந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிப்பார் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை முதலில் ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் பின்னர் பாஜகவின் பதிலை ஏற்றுக்கொண்டன. அதன்பின்னர் நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. நேற்று தொடங்கிய இந்த விவாதம் இன்றும் நடந்தது.இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் காரசாரமாக பேசினார்.
இன்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசும் போது, "நான் பேசுவதை கேட்டு நீங்கள் அச்சப்பட வேண்டாம். நான் இன்று மோடி அதானி உறவு குறித்து பேசப்போவதில்லை எனவே நீங்கள் பயப்பட வேண்டாம் அமைதியாக இருங்கள். எனது ஒற்றுமையாத்திரை இன்னும் முடியவில்லை. நான் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் சென்று இருந்தேன்
ஆனால் பிரதமர் இன்று வரை அங்கு செல்லவில்லை அவரைப் பொறுத்தவரை நாட்டில் ஒரு பகுதியாக மணிப்பூர் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மணி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார். இந்த மத்திய அரசு இந்தியாவுடைய அடிப்படையையே கொலை செய்து விட்டது. மணிப்பூர் மாநிலத்தை இரண்டாக மத்திய அரசு பிளந்து விட்டது. எனது ஒரு அம்மா இங்கே எனது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் .ஆனால் எனது இன்னொரு தாயான மணிப்பூர் மாநிலத்தின் பாரதமாதாவை நீங்கள் கொலை செய்திருக்கிறீர்கள்" என்று கூறினார். இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்தார்.
இறுதியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசினார். எதிர்க்கட்சிகளை தனது உரையின் போது சரமாரியாக விளாசினார்.
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நாட்டில் பிரதமர் மீதும் இந்த அரசாங்கம் மீதும் நம்பிக்கை இல்லை என்ற மாயையை ஏற்படுத்தவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாட்டில் எதிர்க்கட்சிகளின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி உள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. எனவே மத்திய அரசு செய்த பணிகளை நான் குறிப்பிட வேண்டும்.
தொடர்ந்து இரண்டு முறை முழு பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி இந்தியாவில் வந்துள்ளது. பாஜக தொடர்ந்து இரண்டு முறை அரசாள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் பிரபலமான பிரதமர் என்றால் அது நிச்சயம் நரேந்திர மோடிதான். இதை நான் கூறவில்லை. உலகம் முழுவதிலும் இருந்து பல சர்வேகள் அப்படித்தான் கூறுகின்றன. சுதந்திரத்திற்கு பிறகு ஒரு நாள் கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் 24 மணி நேரத்தில் 17 மணி நேரம் உழைக்கும் பிரதமர் நரேந்திர மோடி தான். சுதந்திரத்திற்குப் பிறகு இந்த அளவிற்கு கடுமையாக உழைக்கும் பிரதமர் என்றால அது நரேந்திர மோடிதான். கடந்த 9 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட முக்கிய முடிவுகளை மோடி அரசு எடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மீது பொதுமக்களோ அல்லது நம்முடைய நாடாளுமன்றமோ அவநம்பிக்கை கொள்ளவில்லை. இந்த இவர்களின் முழு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் நோக்கம் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை விதைப்பது தான். இது மக்களின் ஆசைகளின் பிரதிபலிக்கவிலலை. சிறுபான்மையினர் குறித்து கூட கேள்வி கூட எழுப்பப்படவில்லை. நீங்கள் திட்டங்களை உருவாக்குகிறவர்கள்; ஆனால் நடைமுறைப்படுத்தாதவர்கள். நாங்கள் செயல்படுத்தக் கூடியவர்கள்.
மத்திய அரசு ரூ1 செலவு செய்தால் அதில் பொதுமக்களுக்கு 15 பைசாதான் கிடைக்கிற நிலைமை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்தது; இப்போது ரூ1-ம் முழுமையாக மக்களுக்கு செல்லும் நிலைமையை உருவாக்கி இருக்கிறோம்" என அமித் ஷா கூறினார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications