படத்தில் ஒளிந்திருக்கும் வாத்து, . 9 செகண்ட் டைம்.. கண்டுபிடிச்சா நீங்க வேற லெவல் பாஸ்!
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் படத்தில் ஒளிந்திருக்கும் வாத்து, பட்டாம்பூச்சி, வவ்வால் ஆகியவற்றை 9 செகண்டுக்குள் நீங்க கண்டுபிடித்தால் உங்கள் அறிவாற்றல் அதிகம் தான்.
கண்களை குழப்பும் ஆப்டிகல் இல்யூசன் படங்களுக்கு இணையத்தில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
இதுபோன்ற ஆப்டிகல் இல்யூசன் படங்கள் அறிவுத்திறனை சோதிப்பதோடு, மனதுக்கு புத்துணர்ச்சியையும் தருகிறது என்றே சொல்லலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
முதலில் புதிரான இந்த படங்கள் பார்ப்பவர்களை குழப்பம் அடைய செய்கிறது. படத்தில் மறைந்துள்ள விலங்குகளோ அல்லது பறவையோ முதலில் நம் கண்களுக்கு தெரிவதில்லை. உற்று கவனித்த பின்னரோ அல்லது ஏதாவது க்லூக்கள் கிடைத்தாலோ தான் நம் கண்களுக்கு தெரியும். ஒருசில நேரம் நம் கண்களை குழப்பி விட்டு தலையை பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு ஒருசில படங்களை கண்டுபிடிக்க சிரமமாக இருக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன.

9 செகண்டுக்குள்
இதுபோன்ற ஆப்டிகல் இல்யூசன் படத்தில் மேற்பார்வையாக பார்க்கும்போதும், உற்று கவனித்து பார்க்கும் போது நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு ஆப்டிகல் இல்யூசன் புகைப்படம் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த படத்தில் உள்ள வாத்து, வவ்வால் மற்றும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிப்பதுதான் இன்றைய டாஸ்க். அதுவும் 9 செகண்டுக்குள் இந்த 3 ஐயும் கண்டுபிடித்தால் நீங்க ரொம்ப ஸ்மார்ட் தான்.

கண்டுபிடிக்க முடிந்ததா
சரி அந்த படத்தில் என்னவெல்லாம் நம் கண்களுக்கு முதலில் தெரிகிறது என்றால் ஒரு குடும்பத்தினர் தனது வீட்டு வாசலில் ஒரு பெட்டி தயார் செய்வது போல் உள்ளது. அவர்களுடன் ஒரு குட்டி நாய் ஒன்றும் இருக்கிறது. பக்கத்தில் ஒரு மரம், செடிகள் மற்றும் பெட்டி செய்வதற்கான பொருட்கள் இருக்கின்றன. ஆனால் இதில் வாத்து, வவ்வால் மற்றும் பட்டாம்பூச்சி எங்கிருக்குக்கிறது என்பது முதலில் வெளிப்படையாக தெரியவில்லை என்றே சொல்லலாம். சரி 9 செகண்ட் எடுத்துக்கோங்க.. இப்போ உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?

வெள்ளை நிறத்தில்
கண்டுபிடித்தால் நீங்கள் சிறந்த நினைவாற்றல் கொண்டவர் என்றே சொல்லலாம். மேலும் அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்றும் சொல்லலாம். சரி கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு ஒரு குழு.. என்னவென்றால் இந்த 3ம் இயற்கையான நிறத்தில் இல்லாமல், வெள்ளை நிறத்தில் அதன் உருவம் போல் இருக்கிறது. இப்போது கண்டுபிடிக்க முடிந்ததா.. கண்டுபிடித்தா ஸ்மார்ட் தான்.. இப்போதும் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு விடை சொல்லப்படுகிறது.

3 டிப்ஸ்கள்
1.சிறுவன் சிறுமிக்கு இடையே ஒரு இடைவெளி இருக்குது அல்லவா.. அதை சற்று உற்று கவனியுங்கள் இப்போது அதில் வவ்வால் இருப்பது தெரிகிறதா... 2. இதேபோல் நாயின் பின்புற கால்களுக்கு இடையில் கவனித்தீர்கள் என்றால் அதில் வாத்து போன்ற உருவம் இருப்பது தெரியும்.. 3. பட்டாம்பூச்சி எங்கிருக்கிறது என்றால் மரத்தின் அடி இலைப்பகுதிகளில் வெள்ளை நிறத்தில் தெரிவதை உற்று பாருங்கள்... இருக்கிறதா.. இப்போதும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது அதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.












Click it and Unblock the Notifications