Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்டிகல் இல்யூசன்: படத்தில் ஒளிந்திருக்கும் ஆந்தைகள்.. 9 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிச்சா வேற லெவல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு ஆப்டிகல் இல்யூசன் படத்தில் 3 ஆந்தைகள் ஒளிந்து இருக்கிறது. இந்த 3 ஆந்தைகளையும் 9 செகண்டுக்குள் நீங்க கண்டுபிடித்தால் மாஸ் தான்.

ஆப்டிகல் இல்யூசன் படங்களுக்கு இணையத்தில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

கண்களை குழப்பும் ஆப்டிகல் இல்யூசன் படங்கள் தங்களது அறிவுத்திறனை சோதிப்பதோடு, மனதுக்கு புத்துணர்ச்சியையும் தருகிறது என்றே சொல்லலாம்.

 ஆப்டிகல் இல்யூஷன் படம்

ஆப்டிகல் இல்யூஷன் படம்

புதிரான இந்த படங்கள் பார்ப்பவர்களை ஆரம்பத்தில் குழப்பம் அடைய செய்கிறது. பின்னர் ஏதாவது குழுக்கள் கிடைத்தால் கண்டுபிடித்துவிடலாம் என்று சொல்ல தோனும்... குழுக்கள் கொடுத்த பின்னர் ஆப்டிகல் இல்யூசன் படத்தில் மறைந்திருக்கும் ஒன்றை நாம் கண்டுபிடித்தால் இது எளிதானது தான் என்று சொல்ல தோன்றும்.. அந்த அளவுக்கு நம்மை குழப்பமடையச் செய்யும் இந்த ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்கள் நமது கவனிக்கும் திறனை சோதித்து பார்க்கும் விதத்தில் இருக்கும்.

 3 ஆந்தைகள் மறைந்து உள்ளன

3 ஆந்தைகள் மறைந்து உள்ளன

இதன் காரணமாக இத்தகைய படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஹிட் அடித்து வருகின்றன. பல படங்களில் மறைந்திருக்கும் விஷயங்களை முதல் ஆளாக நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பலர் இது போன்ற அறிவினை சோதிக்கும் படங்களை விரும்பி வருகின்றனர். அப்படி ஒரு ஆப்டிகல் இல்யூசன் புகைப்படம் ஒன்றை ஜார்ஜலி தாஸ் என்பவர் வெளியிட்டுள்ளார். அவர் இது போன்ற ஆப்டிகல் இல்யூசன் படங்களை உருவாக்குவதில் கில்லாடி என்றே சொல்லலாம். சரி இன்று அவர் வெளியிட்டுள்ள புகைப்பட்டத்தில் அப்படி எதை கண்டுபிடிக்க சொல்லியிருக்கிறார் என்றால், 3 ஆந்தைகளை தான்.

 9 செகண்ட் டைம்

9 செகண்ட் டைம்

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், பள்ளி நிகழ்ச்சியில் மாணவர்கள் சிலர் கூட்டமாக நிற்பது போலவும் அவர்கள் ஒவ்வொருவரும் புத்தகங்கள் மற்றும் ஏதோ சில செல்லப்பிராணிகளுடன் நிற்பது போல் இருக்கிறது. இந்த கூட்டத்துக்குள் 3 ஆந்தைகளும் உள்ளதாக அவர் கூறுகிறார். மேலும் இந்த கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் ஆந்தைகளை கண்டுபிடிக்க 9 செகண்ட் டைம் அளித்துள்ளார். ஒவ்வொரு ஆந்தைக்கும் 3 செகண்ட் என்ற விதத்தில் மொத்தம் 3 ஆந்தைகளுக்கு 9 செகண்ட் கொடுத்துள்ளார்.

 ஒரு ஆந்தையாவது கண்ணுக்கு தெரிந்ததா

ஒரு ஆந்தையாவது கண்ணுக்கு தெரிந்ததா

சரி தற்போது 3 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. உங்களால் முதல் ஆந்தையை கண்டுபிடிக்க முடிந்ததா.. கண்டுபிடித்தால் சூப்பர்.. சரி இன்னும் 3 செகண்டுகள் எடுத்துக்கொள்ளுங்கள் இப்போது கண்டுபிடிக்க முடிந்ததா.. இல்லையெனில் மேலும் 3 விநாடிகள் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. தற்போது கண்டுபிடிக்க முடிந்ததா 3 ஆந்தைகளையும்... இல்லையா... சரி ஒரு ஆந்தையாவது கண்ணுக்கு தெரிந்ததா... கண்டுபிடித்திருந்தால் கிரேட் தான் நீங்க...

 கண்களுக்கு தெரிந்ததா?

கண்களுக்கு தெரிந்ததா?

அப்படி ஒரு ஆந்தைகளையும் கண்டுபிடிக்க முடியாவர்களுக்கு முதல் டிப்ஸ்.. 'ஆந்தை மாணவர்கள் ஒருவரின் பின்னால் இருந்தபடி மகிழ்ச்சியுடன் எட்டிப்பார்க்கிறது' என்பதுதான்... அப்படியும் கண்டுபிடிக்காவிட்டால் 2-வது டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. இதில், 3 ஆந்தைகளும் வெவ்வேறு நிறங்களில் இருக்கிறது என்பதுதான். இப்போது கண்டுபிடித்திருந்தாலும் நீங்கள் கிரேட் தான்...

 ரவுண்ட் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது

ரவுண்ட் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது

ஆனால் என்னய்யா நீங்க.. அந்த படத்தில் ஆந்தைகள் இருக்கிறது போலவே தெரியலையே.. என்று ஒருசிலர் தலையை பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு முயன்றாலும் கண்ணுக்கு தெரியவில்லை என்றால்.. கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஆந்தைகள் ரவுண்ட் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. இப்போது அதை பார்த்து ரிலாக்ஸ் செய்து கொள்ளவும்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+