எப்புட்றா.. என்ன வேகம்.. மரத்துல மலை பாம்பு ஒரே நொடியில் சொய்ங்னு ஏறுதே.. வீடியோ பாருங்க
டெல்லி: மலைப்பாம்புகள் மரத்தில் எப்படி ஏறும் என்பது குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மலைப்பாம்பு சரசரவென வளைந்து நெளிந்து ஏறுகிறது. சில நொடிகளில் மரத்தில் வேகமாக ஏறும் வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
மலைப்பாம்புகள் பொதுவாக நஞ்சுத்தன்மை கொண்டவை கிடையாது. ஆனால் தனக்கு கிடைக்கும் விலங்குகளை உணவுக்காக அடித்து விழுங்கும் தன்மை கொண்டவை. பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். 12 வகையான மலைப்பாம்பு இனங்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன.

ஆபிரிக்கக் கண்டத்தில் வெப்ப மண்டலங்களில் சகாரா பாலைவனத்திற்கு தென் பகுதியில் மலைப்பாம்புகள்காணப்படுகின்றது. எனினும் ஆபிரிக்காவின் தெற்குப்பகுதியில் இவை காணப்படுவதில்லை. அதேவேளை ஆசியாவிலே வங்கதேசம், நேபாளம், இந்தியா, இலங்கை, நிக்கோபார் தீவுகள் போன்றவற்றிலும், மியான்மார், தென் சீனா, ஆங்கொங், ஹைனன் போன்றவற்றிலும் மலேசியப் பகுதிகளான இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்சு போன்றவற்றிலும் மலைபாம்புகள் அதிகமாக காணப்படுகிறது.
மலைப்பாம்புகள் புல்வெளிகள், சதுப்பு நிலம், கழிமுகம் பேன்ற இடங்களில் உள்ள பாறை அடிவாரத்தில், மரக்காடுகள், குறிப்பாக தண்ணீர் ஊற்றுகள் சார்ந்த வாழ்விடங்களில் பரவலான காணப்படுகிறது. சில நேரங்களில் இவை பாலூட்டிகளால் கைவிடப்பட்ட வளைகள், மரங்கள் பொந்துகள், தண்ணீர் நிறைந்த நாணல் மற்றும் சதுப்புநிலக் காடுகளில் காணப்படுகின்றன.
If you didn't know, this is how the Reticulated Python climbs a tree.
— Curious Archive (@curious_archive) August 5, 2022
This sped up footage really demonstrates how snakes are just a muscular tube. pic.twitter.com/Kt5t2JiMvX
மலைப்பாம்புகள் மந்தமாக, மெதுவாக நகர்வது வழக்கம் கொண்டவை. மறைந்திருந்து அதிரடியாக தன் உணவை வேட்டையாடக்கூடியது. பிற பாம்புகள் போல வளைந்து வளைந்து நகராமல் நேராக நகரக்கூடியவை. இவை மிகச்சிறப்பாக நீருக்கடியில் நீந்தக்கூடியவை. தேவைப்பட்டால் பல நிமிடங்கள் நீரில் மூழ்கி இருக்கும். இப்பாம்புகள் பொதுவாக நீர்நிலை அருகில் இருக்கவே விரும்புபவை ஆகும்.
இந்நிலையில் மலைப்பாம்புகள் மரத்தில் எப்படி ஏறும் என்பது குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மலைப்பாம்பு சரசரவென வளைந்து நெளிந்து ஏறுகிறது. சில நொடிகளில் மரத்தில் வேகமாக ஏறும் வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அந்த வீடியோவை பாருங்கள்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications