இங்கே மறைந்திருக்கும் பூனையை கண்டுபிடிங்க பாப்போம்.. 5 செகண்ட் தான் டைம்.. சவாலுக்கு ரெடியா?
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் படத்தில் பூனை ஒன்று மறைந்திருக்கிறது. இந்த பூனையை 5 செகண்டுக்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்க ஜீனியஸ் தான்.
ஆப்டிகல் இல்யூஷன் போன்ற படங்களுக்கு எப்போதும் நெட்டிசன்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு.
தற்போதைய நவீன உலகில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் பலருக்கும் சமூக வலைத்தளங்களே சிறந்த பொழுதுபோக்காக இருந்து வருகிறது.

ஒளி மாயை படங்கள்
சமூக வலைத்தளங்களில் பல்வேறு வகையான எண்டெர்டெயின்மன்ட்கள் இருந்தாலும் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் ஒளி மாயை படங்களுக்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. ஆப்டிகல் இல்யூசன் படங்களை பார்த்து அதில் மறைந்து இருக்கும் விஷயங்களை முதலில் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நெட்டிசன்கள் பலர் போட்டி போட்டுக்கொண்டு இத்தகைய இல்யூஷன் படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

கண்களை ஏமாற்றும்
புதிர்களை கண்டுபிடிக்கும் ஒருசிலர் அதனை தங்களின் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களுக்கு சவால் விடுவது, நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று பெருமை அடிப்பது என ஓய்வு நேரத்தில் இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பரப்பி விடுகின்றார்கள்... பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நேரடியாக மேலோட்டமாக பார்த்தால் நமக்கு எதுவும் தெரியாது. ஆனால், அதை உற்று நோக்கினால் தான், சரியான விடையை கண்டுபிடிக்கும் வகையிலும் இருக்கும்.

5 செகண்ட் டைம்
இதனால், சில நேரம் இல்யூஷன் படங்கள் நமது கண்களை ஏமாற்றி அதற்கு பதில் அளிக்க முடியாமல் போகும்... அப்படிதான் இங்கு ஒரு ஆப்டிகன் இல்யூஷன் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரு பூனை ஒளிந்திருக்கிறது. படத்தில் ஒளிந்திருக்கும் அல்லது மறைந்திருக்கும் பூனையை 15 நொடிகளில் கண்டுபிடிப்பது தான் இன்றைய சவால்.. அதுவும் 5 நொடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான்..

பூனையை கண்டுபிடிச்சீங்களா..
கொடுக்கப்பட்ட படத்தில் ஒரு வீட்டு அறையில் இரண்டு பெண்கள் தனித்தனி நாற்காலியில் எதிர் எதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நடுவே ஒரு ரவுண்ட் வடிவ மேஜை இருக்கிறது. மேஜையை சுற்றிலும் சில பொருட்கள் இருக்கின்றன. வீட்டுஅறையிலும் பல பொருட்கள் இருக்கின்றன. ஆனால் கேள்வி கேட்கப்பட்ட பூனையை மட்டும் காணவில்லை என்பது போல் தோன்றுகிறதா.. சரி ஓகே நல்லா உற்று பாருங்க.. 5 செகண்டில் உங்களால் பூனையை கண்டுபிடிக்க முடிந்ததா..

இங்க தான் இருக்கு
கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்க ஒரு ஜீனியஸ் தான்.. அதி புத்திசாலியும் கூட.. கண்டுபிடிக்காதவங்க... கவலைப்பட வேண்டாம்.. மறு படி ஒருமுறை படத்தை நன்கு பார்க்கவும்.. கூடுதல் நேரம் எடுத்துக்கோங்க.. இப்போது கண்டுபிடிக்க முடிந்ததா.. வீட்டில் தேடினால் பூனையை கண்டுபிடிக்க முடியாது.. அந்த இடது புறம் அமர்ந்திருக்கும் பெண்ணின் தலையில் ஏதோ இருப்பது போல் தெரிகிறதே என்றால் அது தான் பூனை.. மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்திலும் பூனை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications