ரயிலை மிஸ் பண்ணிட்டீங்களா.. டிக்கெட் கேன்சல் செய்துட்டீங்களா.. முழு பணத்தை ரிட்டர்ன் பெறுவது எப்படி?
டெல்லி: தனிப்பட்ட காரணங்களுக்காக ரயிலை தவறவிட்டாலோ அல்லது டிக்கெட்டை ரத்து செய்தாலோ முழு பணத்தையும் திரும்ப பெறலாமே எப்படினு தெரியுமா?
இந்தியாவில் அதிகம் பேர் பயன்படுத்தும் போக்குவரத்து ரயில்தான். இதை சாமானிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரை பயன்படுத்துகிறார்கள். இந்த ரயிலில் கட்டணம் குறைவு, அலைச்சலும் மிச்சம் என்பதால் ரயில் பயணத்தை பலர் தேர்வு செய்கிறார்கள்.
பணக்காரர்கள் ரயிலில் போக முடியும் இடங்களுக்கு ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஏதேனும் அவசரம், அல்லாவிட்டால் ரயில் சேவை இல்லை என்றால்தான் விமான பயணத்தை நாடுகிறார்கள்.

நாடு முழுவதும் 64 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதைகள் உள்ளன. அதில் 22 மில்லியன் பேர் பயணிக்கிறார்கள். ரயில்களில் டிக்கெட் விலை குறைவு, வசதியாக அலுப்பு தெரியாமல் பயணம் செய்யலாம் என்பதால் இதை மக்கள் தேர்வு செய்கிறார்கள். பலரும் தங்கள் பயணத்தை முன் கூட்டியே திட்டமிடுவதால் டிக்கெட்களை முன் பதிவு செய்து ரயிலில் பயணிக்கிறார்கள்.
ஆனாலும் ஒரு சில காரணங்களால் நீங்கள் பயணத்தை ரத்து செய்தாலோ அல்லது ரயிலை தவறவிட்டுவிட்டாலோ பணத்தை திரும்ப பெற முடியும். பயணிகள் ரயிலைத் தவறவிட்டாலோ அல்லது பயணிகளன் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு டிக்கெட்டை ரத்து செய்தாலோ முழு பணத்தையும் திரும்ப பெறலாம். டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்றால் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆன்லைனில் டிக்கெட் டெபாசிட் ரசீதை (ticket deposit receipt) தாக்கல் செய்ய வேண்டும்.
அந்தந்த வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் செலுத்திய வாடிக்கையாளரின் வங்கியில் பணத்தைத் திரும்ப பெறுதல் செயலாக்கப்படும். டிக்கெட்டுகள் 5 நாட்களுக்குள் திருப்பி செலுத்தப்படும். கவுன்டரில் டிக்கெட் பெற்றாலும் ஆன்லைனில் டிடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் மட்டும் பணம் திரும்ப கிடைக்காது.
டிடிஆரை ஆன்லைனில் தாக்கல் செய்வது எப்படி?
ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் மெனு என்பதை கிளிக் செய்து சர்வீஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் ஹிஸ்டரி ஆப்ஷனை பார்க்க வேண்டும். அதில் transitions என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்து இணையதளம் டிடிஆரை பதிவு செய்ய கடவுச்சொல் சரிபார்ப்பை கேட்கும்.
இறுதியாக பயனர் டிடிஆர் தாக்கல் செய்யலாம்.

ரயில்வே நிர்வாகம் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டால் பணத்தை எப்படி திரும்ப பெறுவது
கேப்ட்சாவுடன் பிஎன்ஆர் எண் , ரயில் எண்ணை கொடுக்க வேண்டும்.
எழுதப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்ட தேர்வுப் பெட்டியைத் தேர்வு செய்யவும்
பயனருக்கு ஓடிபி வரும், அதை பெற்றதும் அதை அதற்குரிய இடத்தில் பதிவிடவும்
ரயில் பிஎன்ஆர் தகவல் காண்பிக்கும்.
டிக்கெட்டை ரத்து செய்ய விவரங்களை சரி பார்த்துவிட்டு டிக்கெட் ரத்து என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
திருப்பி செலுத்த வேண்டிய தொகை திரையில் காட்டப்படும்.
பிஎன்ஆர் மற்றும் பணத்தைத் திரும்ப பெறும் விவரங்களுடன் எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.
ரயில் முன்பதிவு கவுன்ட்டரில் டிக்கெட் வாங்கியிருந்தால் அங்கு டிடிஆர் விண்ணப்பத்தை வாங்கி , பூர்த்தி செய்து ஐஆர்சிடிசி அலுவலகத்திற்கு அனுப்பிவிட வேண்டும். நீங்கள் முன்பதிவு செய்த ரயில் கிளம்பிய ஒரு மணி நேரத்திற்குள் இந்த விண்ணப்பத்தை அனுப்பினால் மட்டுமே உங்கள் டிக்கெட் தொகை திரும்ப கிடைக்கும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications