நாய் பராமரிக்க ரூ.45ஆயிரம் சம்பளம்... டிகிரி படித்தவர்கள் தேவை - டெல்லி ஐஐடி விளம்பரம்
நாயைப் பராமரிக்கும் வேலைக்கு ரூ.45,000 சம்பளம் என்றும் டிகிரி படித்திருப்பது அவசியம் என்று டெல்லி ஐஐடி சர்ச்சை விளம்பரம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
டெல்லி: நாய் பராமரிப்பு பணியாளர் வேலைக்கு பிஎஸ்சி, பி.டெக் உள்ளிட்ட டிகிரி படிப்புகள் கட்டாயம் என்று டெல்லி ஐஐடி சார்பில் வெளியிடப்பட்ட வேலை வாய்ப்பு விளம்பரம் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. நடந்தது என்ன என்று விளக்கம் அளித்துள்ளது டெல்லி ஐஐடி.
டெல்லி ஐஐடி கல்வி நிறுவனம், கல்விசாரா பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையிலான வேலைக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாயைப் பராமரிக்கும் பணிக்கு ஆட்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பி.ஏ, பி.காம், பி.டெக் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாத ஊதியமாக 45,000 ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி பதிவிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இன்டர்வியூ செப்டம்பர் 5ஆம் தேதி என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டெல்லி ஐஐடியின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒரு இளைஞர், இது பிடெக் படிப்பை ஏளனம் செய்கிறார்களா என்று கேட்டிருக்கிறார்.


ஒரு கல்வி நிறுவனமாக இருந்துகொண்டு, நாயைப் பராமரிக்கும் பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் தேவை என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது அவர்களின் கல்வியை ஏளனப்படுத்துவதாகும் என்று நெட்டிசன்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்த விளம்பரம் பற்றி தற்போது விளக்கம் அளித்துள்ள டெல்லி ஐஐடி, இந்த விளம்பரத்தில் கால்நடை அறிவியல் பட்டயப்படிப்பு தகுதியைத்தான் முன்வைத்ததாக தெரிவித்துள்ளது. பி.காம், பி.டெக் உள்ளிட்ட படிப்புகள்தான் தகுதியானவை என்பது தவறுதலாக வேறொரு விளம்பரத்தில் இருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுவிட்டதாகவும் தற்போது ஐஐடி தரப்பு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications