பாடல்கள் காப்புரிமை வழக்கு.. சென்னைக்கு மாற்றக் கோரி இளையராஜா உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!
டெல்லி: பாடல்கள் காப்புரிமை தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை, சென்னைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இளையராஜா முறையீடு செய்துள்ளார்.
ஒரே தன்மை கொண்ட வழக்குகள் இரு நீதிமன்றங்களில் நடப்பது முரண்பாடான தீர்ப்புக்கு வழிவகுக்கும் என இசையமைப்பாளர் இளையராஜா மனு தாக்கல் செய்துள்ளார்.

பாடல் காப்பி ரைட் வழக்கு
இசையமைப்பாளர் இளையராஜாவின் நிறுவனத்திடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனி மியூசிக் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இளையராஜா மனு தாக்கல்
இந்நிலையில் சோனி நிறுவனத்துக்கு எதிராக தாம் தாக்கல் செய்த காப்புரிமை தொடர்பான மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாகவும், மும்பை உயர்நீதிமன்றத்தில் உள்ள மனுவையும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி இளையராஜா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பாடல் காப்புரிமை தொடர்பாக வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், ஒரே தன்மை கொண்ட வழக்குகள் இரு நீதிமன்றங்களில் நடப்பது முரண்பாடான தீர்ப்புக்கு வழிவகுக்கும் என இளையராஜா அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இளையராஜா vs வனிதா விஜயகுமார்
இதற்கிடையே, இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடித்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்ற 'ராத்திரி சிவராத்திரி' பாடல் வனிதா விஜயகுமார் நடித்த Mrs and Mr படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பாடலுக்கு நடன இயக்குநரும் இந்தப் படத்தின் நாயகனுமான ராபர்ட், நடிகை கிரணுடன் நடனம் ஆடுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய இசையில் உருவான பாடலை, தன் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி உள்ளனர் என இளையராஜா Mrs And Mr படக்குழு மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் கடந்த ஜூலை 11 முறையீடு செய்தார். இம்முறையீட்டை கேட்ட நீதிபதி வழக்கினை திங்கட்கிழமை (ஜூலை 14) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்திருந்தார்.
அதன்படி வழக்கு இன்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில், "உரிய அனுமதி இல்லாமல் பாடல் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் திரைப்படத்தில் பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது வனிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "குறிப்பிட்ட பாடலை பயன்படுத்த உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு காப்புரிமை கோர முடியாது. அதனால் பாடலை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வனிதா தரப்பில் பாடலை பயன்படுத்தியதற்கான விளக்கத்தை கேட்காமல் பாடலை பயன்படுத்த தடை விதிக்க முடியாது என உத்தரவிட்ட நீதிபதி, மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் வனிதா பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications