அணு ஆயுதம்! ஜெயிலில் இருந்து இந்தியாவிற்கு.. இம்ரான் கான் தந்த வார்னிங்.. கவனித்த பாக். ராணுவம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியாவிற்கு எதிராக கடுமையான புகார்களை, எச்சரிக்கைகளை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுத்துள்ளார். அவர் தற்போது சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் யார் ஆட்சியில் இருந்தாலும்.. உண்மையில் அந்நாட்டில் ஆட்சியில் இருப்பது என்னவோ ராணுவம்தான் என்ற கூற்று உள்ளது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் பிரதமர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது பாகிஸ்தான் ராணுவம்தான். பாகிஸ்தானில் ராணுவ ஜெனரலாக இருப்பவர்கள் சொல்வதே அங்கு சட்டம் என்ற நிலை நிலவி வருகிறது. ஒருவேளை ஜெனரல்கள் சொல்வதை மீறினால் அங்கு ஆட்சியே கவிழும் நிலை கூட ஏற்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் வரலாற்றில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஆட்சி மாற்றங்கள் பல ராணுவம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக 2018ல் இம்ரான் கான் தேர்வான போதே அவர் தன்னை எதிர்த்த எல்லோரையும் எளிதாக சமாளிக்க காரணம் ராணுவம் என்றே கூறப்பட்டது. அந்நாட்டு ராணுவத்தின் செல்லப்பிள்ளையாகவே இம்ரான் கான் இருந்தார். ராணுவம் சொல்வதை எல்லாம் கேட்கும் தலையாட்டி பொம்மை என்று கூட இம்ரான் கான் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அப்படிப்பட்ட இம்ரான் கானுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் கடந்த 2022ம் வருடம் ஏற்பட்ட சில மோதல்கள் அவரின் ஆட்சிக்கே எதிராக திரும்பியது.

Imran Khan Nuclear Flash Point warning against India from Pakistan Jail

ராணுவத்தின் அழுத்தம் காரணமாக மெஜாரிட்டியை இழந்து இம்ரான் ஆட்சி கவிழ அதன்பின் ஊழல் புகாரில் இம்ரான் கான் சிறைக்கும் சென்றார். இந்த நிலையில்தான் இந்தியாவிற்கு எதிராக கடுமையான புகார்களை, எச்சரிக்கைகளை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுத்துள்ளார். அவர் தற்போது சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கே பிரதமராக உள்ளே சபாஷ் ஷெரிப் மீது ஏற்கனவே ராணுவம் கொஞ்சம் அப்செட்டில் உள்ள நிலையில்தான் இம்ரான் கான் ராணுவத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்ப இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

இம்ரான் கான் எச்சரிக்கை:

பஹல்காம் துப்பாக்கி சூடு பற்றி பேசி உள்ள இம்ரான் கான், பஹல்காம் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். ஆனால் இதற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை. புல்வாமா நடந்த போதே நமக்கு எதிராக பொய்யாக புகார்கள் வைக்கப்பட்டன. அதில் நாம் ஒத்துழைப்பு தருவதாக கூறியும் இந்தியா அதை ஏற்கவில்லை. நமக்கு எதிரான புகார்களும் நிற்புக்கப்படவில்லை.

இந்த விவகாரம் ஒரு நியூக்ளியர் பிளாஷ்பாயின்ட். காஷ்மீர் ஒரு நியூக்ளியர் பிளாஷ்பாயின்ட்தான். பல கோடி பேர் இரண்டு நாடுகளிலும் இருக்கிறார்கள். மோடி கவனமாக இருக்க வேண்டும். மோடி கவனமாக முடிவு எடுக்க வேண்டும்.

அமைதியே எங்கள் நோக்கம், ஆனால் அதை கோழைத்தனம் என்று தவறாகக் கருதக்கூடாது. இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் அனைத்து திறன்களையும் பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி, பாகிஸ்தான் அமைதியாக சென்று கொண்டு இருக்கிறது. அதை கோழைத்தனம் என்று இந்தியா நினைக்க கூடாது என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை எதிர்த்தால் பாகிஸ்தான் ராணுவத்தின் அனுசரணை கிடைக்கும் என்ற நிலையில் இந்தியாவை எதிர்த்து இம்ரான் கான் இப்படி பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+